அமீரக செய்திகள்

துபாயில் தீபாவளியை முன்னிட்டு எங்கெங்கு வானவேடிக்கை நிகழ்ச்சிகள் நடத்தப்படும்..??

அமீரகத்தில் தீப ஒளி திருநாளை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள், ப்ரொமோஷன்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அத்துடன், கண்கவர் வான வேடிக்கை நிகழ்ச்சிகளும் வரும் நாட்களில் துபாயை ஒளிரச் செய்ய ஆயத்தமாகியுள்ளன.

துபாயின் மிகவும் கவர்ச்சிகரமான இடங்களில் ஒன்றான புளூவாட்டர்ஸ், அய்ன் துபாயுடன், வியாழன் இரவு 8.30 மணிக்கு, பாம் ஜுமைரா மற்றும் துபாய் மெரினாவின் பின்னணியில் அற்புதமான வானவேடிக்கை நிகழ்ச்சியுடன் தீபாவளியைக் கொண்டாடவிருக்கிறது.

மேலும் வியாழன் முதல் சனிக்கிழமை வரை பாலிவுட் பாடல்களைக் கொண்ட புளூவாட்டர்ஸ் ஸ்ட்ரீட் ஃபெஸ்டிவலும் நடைபெறவுள்ளது.

துபாய் ஃபெஸ்டிவல் சிட்டி மால் வியாழன் இரவு 9.30 மணிக்கு அதன் ஃபெஸ்டிவல் பே வாட்டர்சைடு பகுதியில் வானவேடிக்கை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது.

ஒவ்வொரு வியாழன் மற்றும் வெள்ளியன்றும் இரவு 9 மணிக்கு குளோபல் வில்லேஜில் திகைப்பூட்டும் வான வேடிக்கைகள் நிகழ்த்தப்படவுள்ளது. அங்குள்ள இந்தியா பெவிலியனில் தீபாவளியை முன்னிட்டு கூடுதல் நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

துபாயை விட்டு வெளியேறாமல் இந்தியாவில் தீபாவளியைக் கொண்டாடும் உண்மையான அனுபவத்தை பார்வையாளர்கள் இங்கு பெறலாம் என்று அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!