அமீரக செய்திகள்

துபாய், ஷார்ஜாவில் குறைந்த விலையில் PCR டெஸ்ட் எங்கே எடுக்கலாம்.. அதற்கான கட்டணம், நேரம் உள்ளிட்ட அனைத்தும் உள்ளே..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் குளிர்கால விடுமுறைக்குப் பிறகு மாணவர்கள் பள்ளிகளுக்கு திரும்புவதாலும் மற்றும் புத்தாண்டு விடுமுறை முடிந்து ஊழியர்கள் பணியிடங்களுக்கு திரும்பியதாலும் கடந்த ஒரு சில நாட்களாக அமீரகம் முழுவதும் PCR சோதனைக்கான தேவை அதிகரித்துள்ளது.

குளிர்கால விடுமுறை முடிந்து பள்ளிக்கு திரும்பும் மாணவர்களுக்கு PCR சோதனை கட்டாயம் என அறிவிக்கப்பட்டிருந்ததால், துபாய் மற்றும் ஷார்ஜாவில் உள்ள PCR ஸ்கிரீனிங் மையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று கொரோனா பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தற்போது தேவை அதிகரித்திருப்பதாலும், அதிகமான மக்கள் ஒரே நேரத்தில் சோதனை மையங்களை அணுகுவதாலும் PCR சோதனை முடிவுகளை பெறுவதற்கு தற்போது 48 மணிநேரம் வரை ஆகலாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் PCR சோதனைக்கு கட்டணமாக ஒவ்வொரு கிளினிக்கும் வெவ்வேறு விலையை நிர்ணயித்துள்ளது. அதில் அமீரகத்திலேயே குறைந்தபட்சமாக அபுதாபியின் சேஹா குழுமத்தால் நடத்தப்படும் கிளினிக்குகளில் மட்டும் 50 திர்ஹம்ஸ் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய தேவையின் அடிப்படையில், அமீரகத்தில் எங்கெல்லாம் PCR சோதனை மேற்கொள்ளலாம், அதற்கான கட்டணம் எவ்வளவு மற்றும் சோதனை முடிவுகளை பெற அதிகபட்சம் எவ்வளவு நேரம் ஆகும் போன்ற தகவல்களை நாம் இங்கே உங்களுக்காக தொகுத்து வழங்கியுள்ளோம்.

துபாய்:

>> சேஹா கோவிட்-19 ஸ்கிரீனிங் சென்டர்

  • விலை: 50 திர்ஹம்ஸ் (48 மணிநேரத்திற்குள் முடிவுகள்)
  • அப்பாயிண்ட்மெண்ட்: டிரைவ் த்ரூ (மொபைல் அப்ளிகேஷன் மூலம் பதிவு செய்யவும்)
  • திறக்கும் நேரம்: காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை
  • இடம்: சிட்டி வாக் மற்றும் துபாய் பார்க்ஸ் & ரிசார்ட்ஸ், துபாய்

>> வதிவிட மற்றும் வெளிநாட்டினர் விவகாரங்களுக்கான பொது இயக்குநரகம் (GDRFA)

  • விலை: தொழிலாளர்களுக்கு 80 திர்ஹம்ஸ் (48 மணி நேரத்திற்குள் முடிவுகள்)
  • அப்பாயிண்ட்மெண்ட்: வாக்-இன் (அபாயின்ட்மென்ட் தேவையில்லை)
  • திறக்கும் நேரம்: காலை 7 மணி முதல் இரவு 11 மணி வரை
  • இடம்: ஜாஃபிலியா, துபாய்

>> Rizek மொபைல் அப்ளிகேஷன்

  • விலை: 99 திர்ஹம்ஸ் (முடிவுகள் 48 மணிநேரத்திற்குள்)
  • அப்பாயிண்ட்மெண்ட்: வீட்டிற்கு வந்து சோதனை மேற்கொள்ளுதல் (மொபைல் அப்ளிகேஷன் மூலம் RR99 கோடை பயன்படுத்தி பதிவு செய்யவும்)
  • திறக்கும் நேரம்: காலை 7 மணி முதல் இரவு 11 மணி வரை
  • இடம்: துபாய்

>> மீனா லேப்ஸ் கோவிட்-19 ஸ்கிரீனிங் கூடாரம்

  • விலை: 110 திர்ஹம்ஸ் (முடிவுகள் 24 மணி நேரத்திற்குள்)
  • அப்பாயிண்ட்மெண்ட்: டிரைவ் த்ரூ (அபாயின்ட்மென்ட் தேவையில்லை)
  • திறக்கும் நேரம்: காலை 7 மணி முதல் நள்ளிரவு வரை
  • இடம்: உம் சுகீம் சாலை, துபாய்

அபுதாபி:

>> மெடிகிளினிக் மருத்துவமனை

  • விலை: 50 திர்ஹம்ஸ் (முடிவுகள் 24 மணி நேரத்திற்குள்)
  • அப்பாயிண்ட்மெண்ட்: PCR சோதனை மையம் மருத்துவமனையின் F கட்டிடத்தில் உள்ளது (அபாயின்ட்மென்ட் தேவையில்லை)
  • திறக்கும் நேரம்: காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை
  • இடம்: ஏர்போர்ட் ரோடு, அபுதாபி

>> மீடியோர் மருத்துவமனை

  • விலை: 50 திர்ஹம்ஸ் (முடிவுகள் 24 முதல் 48 மணி நேரத்திற்குள்)
  • அப்பாயிண்ட்மெண்ட்: வாக்-இன் (அபாயின்ட்மென்ட் தேவையில்லை)
  • திறக்கும் நேரம்: காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை
  • இடம்: முரூர் ரோடு

>> NMC பரீன் இன்டர்நேஷனல் மருத்துவமனை

  • விலை: 50 திர்ஹம்ஸ் (முடிவுகள் 24 மணி நேரத்திற்குள்)
  • அப்பாயிண்ட்மெண்ட்: வாக்-இன் அல்லது டிரைவ் த்ரூ (அபாயின்ட்மென்ட் தேவையில்லை)
  • திறக்கும் நேரம்: காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை (டிரைவ் த்ரூ 24 மணி நேரமும் )
  • இடம்: செக்டார் 15, முகமது பின் சையத் சிட்டி

ஷார்ஜா:

>> சேஹா கோவிட்-19 ஸ்கிரீனிங் சென்டர்

  • விலை: 50 திர்ஹம்ஸ் (48 மணிநேரத்திற்குள் முடிவுகள்)
  • அப்பாயிண்ட்மெண்ட்: டிரைவ் த்ரூ (மொபைல் அப்ளிகேஷன் மூலம் பதிவு செய்யவும்)
  • திறக்கும் நேரம்: காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை
  • இடம்: அல் பைத் மெத்வாஹெட், ஷார்ஜா

>> NMC மருத்துவ மையம்

  • விலை: 100 திர்ஹம்ஸ் (72 மணி நேரத்திற்குள் முடிவுகள்)
  • அப்பாயிண்ட்மெண்ட்: வாக்-இன் (அபாயின்ட்மென்ட் தேவையில்லை)
  • திறக்கும் நேரம்: காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை
  • இடம்: புஹைரா கார்னிச், ஷார்ஜா

>> தும்பே மருத்துவமனை

  • விலை: 100 திர்ஹம்ஸ் (48 மணி நேரத்திற்குள் முடிவுகள்)
  • அப்பாயிண்ட்மெண்ட்: வாக்-இன் (அபாயின்ட்மென்ட் தேவையில்லை)
  • திறக்கும் நேரம்: காலை 9 மணி முதல் நள்ளிரவு வரை
  • இடம்: தும்பே ஹாஸ்பிடல் டே கேர், யுனிவர்சிட்டி சிட்டி ரோடு, முவேலா, ஷார்ஜா

அபுதாபியில் உள்ள தொழில்துறை பகுதியான முஸாஃபா உள்ளிட்ட சில இடங்களில் அபுதாபி அரசால் அமைக்கப்பட்டுள்ள PCR சோதனை மையங்களில் கட்டணம் ஏதும் இல்லாமல் இலவசமாக PCR சோதனை மேற்கொள்ளப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. எனினும் இந்த மையங்களிலும் சோதனை முடிவுகள் பெறுவதற்கு குறைந்து 48 மணி நேரங்கள் ஆகும் என்பதும் கவனிக்கத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!