அமீரக செய்திகள்

அமீரகத்தில் எந்தெந்த வேலைகளில் கிராஜுட்டி, வருடாந்திர விடுமுறை போன்ற சேவைப் பலன்கள் கிடைக்கும்? அமைச்சகம் வெளியிட்டுள்ள விளக்கம்…

ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரியும் ஒரு ஊழியருக்கு வழங்கப்படும் கிராஜுட்டி (Gratuity), வருடாந்திர விடுமுறை (Annual Leave) உள்ளிட்ட வேலை பலன்களுக்கு (job benefits) தகுதியான பணிமுறைகள் (work type) எவை என்பதை மனித வளங்கள் மற்றும் எமிரேடிசேஷன் அமைச்சகம் (MoHRE) தெளிவுபடுத்தியுள்ளது.

இது குறித்து MoHRE வெளியிட்ட பதிவில், நாட்டில் ஒரு ஊழியர் செய்யும் முறைகளே அவர்கள் பெறக்கூடிய வேலை பலன்களைத் தீர்மானிக்கும் என்று குறிப்பிட்டிருந்தது. அதன்படி வேலைவாய்ப்பு உறவுகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பான ஃபெடரல் ஆணை-சட்டத்தின் கீழ் வரும் ஆறு வகையான வேலை முறைகள் பற்றி  விளக்கமளித்துள்ளது.

UAE கிராஜுட்டி கால்குலேட்டர்:

அமீரகத்தில் ஒவ்வொரு பணி முறைக்கும் பணியின் தன்மையின் அடிப்படையில் சேவை பலன்கள் மற்றும் வருடாந்திர விடுமுறை பற்றிய குறிப்பிட்ட விதிகள் உள்ளதாக அமைச்சகம் கூறியுள்ளது. அதன் அடிப்படையில், ஆறு வகையான வேலை முறைகளின் அடிப்படையில் சேவைப் பலன்கள் கணக்கிடப்படும். அவற்றைப் பற்றி  இங்கே பார்க்கலாம்:

1. முழுநேர வேலை (Full-time job):

இந்த பணி முறையில், ஊழியர் அனைத்து நியமிக்கப்பட்ட வேலை நாட்களிலும் தினசரி வேலை நேரம் முழுவதும் ஒரு முதலாளிக்கு கீழ் வேலை செய்ய வேண்டும்.

2. தொலைதூர வேலை (Remote Work):

இந்த முறையின் கீழ், ஊழியர் பொதுவான அலுவலக அமைப்பிலிருந்து விலகி வேறு இடங்களில் இருந்து கொண்டு குறிப்பிட்ட வேலையை செய்து கொடுக்க வேண்டும்.

3. பகிரப்படும் வேலை (Job Sharing):

இந்த பணி முறையில், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் ஒரு முழுநேர வேலையில் இருக்கும் பொறுப்புகள் மற்றும் நேரங்களைப் பகிர்ந்து கொண்டு பணிபுரிவதாகும்.

4. பகுதி நேர வேலைவாய்ப்பு (Part-time Employment):

இந்த முறையில், ஒரு தொழிலாளி ஒன்றுக்கு மேற்பட்ட முதலாளிகளுக்கு வேலை செய்ய முடியும், ஆனால் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வேலை நேரம் அல்லது நாட்களுக்கு மட்டுமே இது பொருந்தும்.

5. தற்காலிக வேலை (Temporary Work):

இதில் ஊழியரின் பணிக்காலம் முன்னரே தீர்மானிக்கப்பட்டு விடும். அதாவது, ஒரு குறிப்பிட்ட பணி அல்லது திட்டம் முடிந்ததும் அவரது வேலைவாய்ப்பு முடிவடைந்து விடும்.

6. நெகிழ்வான வேலை (Flexible Work):

இந்த பணி முறையின் கீழ், ஒரு முதலாளியின் பணிச்சுமை, பொருளாதார நிலைமைகள் மற்றும் செயல்பாட்டுத் தேவைகளைப் பொறுத்து, வேலை நேரம் அல்லது நாட்களில் மாறுபாடு இருக்கும். சில சமயங்களில் வேலை நேரம் அதிகமாக இருக்கலாம் அல்லது குறைவாக இருக்கலாம். எனவே, தேவைகளின் அடிப்படையில் ஏற்ற இறக்கமான நேரங்களில் பணியாளர் வேலை செய்ய வேண்டியிருக்கும்.

Related Articles

Back to top button
error: Content is protected !!