ஷாப்பிங் ஆஃபர்ஸ்

துபாய்: பொருட்களுக்கு 90% தள்ளுபடி அளிக்கும் 12 மணி நேர விற்பனை.. 1 மில்லியன் திர்ஹம் வெல்லவும் வாய்ப்பு…!!

துபாய் ஷாப்பிங் ஃபெஸ்டிவலில் ஒரு பகுதியாக துபாயில் இருக்கும் குறிப்பிட்ட மால்களில் வாடிக்கையாளர்கள் வாங்கும் பொருட்களுக்கு 90 சதவிகிதம் வரை தள்ளுபடி அளிக்கப்படவுள்ளது.

இந்த பிரத்தியேக 12 மணி நேர விற்பனை டிசம்பர் 26 அன்று மஜித் அல் ஃபுத்தைம் மால்களில் நடைபெறும். இதில் ஷாப்பிங் செய்பவர்களுக்கு 90 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கும்.

இந்த விற்பனையின் மூலம் மால் ஆஃப் தி எமிரேட்ஸ், சிட்டி சென்டர் மிர்திஃப், சிட்டி சென்டர் தேரா, சிட்டி சென்டர் மெய்செம், சிட்டி சென்டர் அல் ஷிண்டகா மற்றும் மை சிட்டி சென்டர் அல் பர்ஷா ஆகியவற்றில் உள்ள 100 க்கும் மேற்பட்ட பிராண்டுகளில் வாடிக்கையாளர்கள் 25 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை தள்ளுபடியை பெற முடியும் என கூறப்பட்டுள்ளது. இந்த தள்ளுபடி காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தள்ளுபடி விற்பனையுடன் கூடுதலாக, குடும்பத்திற்கு ஏற்ற நேரடி பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் DSF-ல் பங்குபெறும் மால்களில் 300 திர்ஹம் அல்லது அதற்கும் அதிகமான அளவில் ஷாப்பிங் செய்யும் போது, ​​ஷாப்பிங் செய்பவர்கள் தங்கள் ரசீதுகளை (receipt) SHARE அப்ளிகேஷனில் ஸ்கேன் செய்து, ஒரு அதிர்ஷ்ட குலுக்கலில் பங்கு பெறலாம். இதன் மூலம் ஒரு மில்லியன் SHARE புள்ளிகளை வெல்வது மற்றும் DSF 12-மணிநேர விற்பனையின் மில்லியனர் ஆகுவதற்கான வாய்ப்பையும் பெறலாம் என கூறப்பட்டுள்ளது.

இதற்கு Google Play மற்றும் Apple Store இலிருந்து SHARE அப்ளிகேஷனை டவுன்லோடு செய்ய வேண்டும். மேலும் தகவலுக்கு, சமூக ஊடக சேனல்கள் மற்றும் www.mydsf.ae இல் @StyledByDubai மற்றும் @CelebrateDubai ஐ சென்று பார்வையிடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

துபாயின் மால்கள், சில்லறை விற்பனைக் கடைகள் ஆகிய அனைத்தும் பொது சுகாதார அதிகாரிகளால் வழங்கப்பட்ட கடுமையான கொரோனா சுகாதார மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகளை தொடர்ந்து கடைபிடிக்கின்றன. அதே நேரத்தில் பார்வையாளர்களையும் ஷாப்பிங் செய்பவர்களையும் பாதுகாப்பாகவும் எளிதாகவும் வைத்திருக்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
error: Content is protected !!