வளைகுடா செய்திகள்

குவைத்தில் இந்த வருடம் மட்டும் சுமார் 25,000 வெளிநாட்டவர்கள் நாடு கடத்தல்… எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என தகவல்..!!

குவைத்தில், அரசுக்கு புறம்பாக விதிமீறல்களில் ஈடுபடுவோரை நாடு கடத்தும் செயல்முறையானது தற்பொழுது முழு வீச்சுடன் நடந்து கொண்டு வருகின்றது. முதல் துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான ஷேக் தலால் அல்-காலித்தின் உத்தரவின்படி, குடியுரிமை மீறல்கள், குற்றச் செயல்கள் மற்றும் சமூக ஒழுக்கத்திற்கு சீர்கேடு விளைவிப்பவர்களை பொது நலன் கருதி உடனடியாக நாடு கடத்த வேண்டும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை நாடு கடத்தினால் நாடு ஒழுங்கு பெறும் என்ற அடிப்படையில் இந்த நடவடிக்கையானது தற்பொழுது தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதன்படி இந்த ஆண்டின் ஜனவரி தொடக்கத்தில் இருந்து ஆகஸ்ட் 19, 2023 வரை சுமார் 25,000 வெளிநாட்டவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானோர் குடியுரிமை மற்றும் தொழிலாளர் சட்டங்களை மீறுதல், போதை பொருள் கடத்தல், பிச்சை எடுத்தல் மற்றும் நாட்டின் பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்கும் செயல்களை செய்தல் ஆகிய நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நாடு கடத்தப்பட்டவர்களில் 10,000 பேர் பெண்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசாங்கத்தின் பார்வையில் படாமல் மறைமுகமாக 1,00,000 பேர் விதிமீறல்களில் ஈடுபட்டுள்ளனர் என்ற தகவல்களும் கிடைத்துள்ளன. எனவே, அவர்களையும் கண்டறிந்து விரைவில் கைது செய்வதற்கான தீவிர பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, 2023 ஆம் ஆண்டின் இறுதிக்குள் நாடு கடத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 35,000-த்தை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் ரெசிடென்ஸ் விசா காலாவதி ஆகியும் தங்கி இருப்பவர்கள் தொழிலாளர் சட்டத்தை மீறியவர்கள் என்ற அடிப்படையில் நாடு கடத்தப்படுவர்.

அதன்படி ரெசிடென்ஸி விவாகர விசாரணையின் பொது நிர்வாகம் நாடு கடத்தும் நபர்களை பரிந்துரைப்பதில் முதலிடத்தில் இருப்பதாகவும், பொது பாதுகாப்புத்துறை இரண்டாம் இடத்தில் இருப்பதாகவும் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. குறிப்பிட்டுச் சொல்லப் போனால் பெரும்பாலான வெளிநாட்டவர்கள் விதிமீறல்களில் ஈடுபட்ட குற்றத்திற்காக நாடு கடத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Back to top button
error: Content is protected !!