அமீரக செய்திகள்

உலகின் மிகப்பெரிய இன்ஃப்ளாட்டபிள் பார்க்கை திறந்துள்ள துபாய்.. புதிய கின்னஸ் சாதனை படைப்பு..!!

உலகிலேயே மிகப்பெரிய காற்றினால் நிரப்பப்பட்ட பூங்காவை (inflatable park) உருவாக்கியுள்ள துபாய் புதிய கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது. துபாய் பார்க்ஸ் மற்றும் ரிசார்ட்ஸில் அமைக்கப்பட்டுள்ள, inflatable JumpX பார்க்கானது, சுமார் 1,262 சதுர மீட்டருக்கு பரந்து விரிந்துள்ளது. மேலும் இந்த பார்க் 400 பேர் வரை தங்கக் கூடிய அளவில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து துபாய் பார்க்ஸ் மற்றும் ரிசார்ட்ஸின் செயல்பாடுகளுக்கான பொது மேலாளர் டெனிஸ் பாஸ்கல் அவர்கள் கூறுகையில், மிகப்பெரிய ஊதப்பட்ட பவுன்சி பூங்காவுக்கான உலக கின்னஸ் சாதனையை முறியடித்துள்ளதாகவும், மேலும் இந்த பூங்காவில், கூடைப்பந்து திடல் (basketball court), தடைகள் உள்ள திடல் (obstacle course), வேடிக்கையான பந்துகளுக்கான திடல் (fun ball field) மற்றும் சுவர்களில் ஏறுதல் (climbing walls) போன்ற போன்ற 15 வெவ்வேறு பிரிவுகள் இருப்பதாகவும் விவரித்துள்ளார்.

தற்போது, இந்த ஊதப்பட்ட அமைப்பில் 400 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், பார்வையாளர்கள் ஆங்காங்கே கொடுக்கும் அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், அவர்களின் பாதுகாப்பிற்காகவும் முக்கியமான புள்ளிகளில் ஆபரேட்டர்களை வைத்திருப்பதாக அவர் கூறியுள்ளார். இதற்கு முந்தைய உலக சாதனையாக US-ல் உள்ள பிக் பவுன்ஸ் அமெரிக்கா, 1,000 சதுர மீட்டர் பரப்பளவில் நிகழ்த்திக் காட்டியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், உலக கின்னஸ் சாதனையின் அதிகாரப்பூர்வ நீதிபதி அதன் அதிகாரப்பூர்வ சான்றிதழை துபாய் ஹோல்டிங் என்டர்டெயின்மென்ட்டின் தலைமை நிர்வாக அதிகாரி பெர்னாண்டோ ஈரோவா அவர்களுக்கு வழங்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து பேசிய ஈரோவா, புதிய கின்னஸ் உலக சாதனை படைத்தது மட்டுமல்லாமல், துபாய் பார்க்ஸ் & ரிசார்ட்ஸில் மற்றொரு தனித்துவமான குடும்ப அனுபவத்தையும் கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் துபாய் பார்க்ஸ் மற்றும் ரிசார்ட்ஸின் ரிவர்லேண்டில் கூடுதலாக, இலவச டைனோசர் அணிவகுப்பான ‘Dino Mania’ சேர்க்கப்பட்ட பின்னர், இந்த ஊதப்பட்ட JumpX அமைப்பு வந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த JumpX பவுன்சி பூங்காவில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு நபருக்கு 60 திர்ஹமும், நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கு 180 திர்ஹமும் கட்டணமாக வசூலிக்கப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.

Related Articles

Back to top button
error: Content is protected !!