அமீரக செய்திகள்

UAE: இலவசமாக ஷாப்பிங் செய்ய வவுச்சர் வழங்கும் ஹைபர் மார்கெட்..!! யாருக்கெல்லாம் கிடைக்கும்..??

ஐக்கிய அரபு அமீரகத்தின் பொன்விழா கொண்டாட்டத்தைக் குறிக்கும் வகையில் 1971 ஆம் ஆண்டு பிறந்த குடியிருப்பாளர்கள் துபாயில் இலவச ஷாப்பிங்கை அனுபவிக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள் என தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் மிகப்பெரிய ஹைப்பர் மார்க்கெட்களில் ஒன்றான யூனியன் கோஆப் (union coop), திங்களன்று, 1971 இல் பிறந்த வாடிக்கையாளர்களுக்கு அமீரகத்தின் 50-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு அதன் 100 நாள் விளம்பர பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இலவச ஷாப்பிங்கிற்காக Afdhal கார்டு பரிசாக வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

அது மட்டுமல்லாது 100 நாள் விளம்பர பிரச்சாரம் நவம்பர் 10, 2021 அன்று தொடங்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்த ப்ரொமோஷனில் சுமார் 50 பேர் ஸ்மார்ட்போன்களை வெல்லும் வாய்ப்பைப் பெறுவார்கள் என்றும் 50 பேர் தங்கக் கட்டிகளை வெல்லலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 50 பேர் மவுண்டைன் பைக்குகளை வெல்வார்கள் மற்றும் 50 பேருக்கு 50,000 தமயாஸ் புள்ளிகளும் வெகுமதியாக வழங்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த சில்லறை விற்பனை நிறுவனமானது தான் விற்கும் ஆயிரக்கணக்கான பொருட்களின் விலைகளைக் குறைக்கவும் விளம்பர பிரச்சார காலத்தில் நுகர்வோருக்கு பல்வேறு பரிசுகளை வழங்கவும் 50 மில்லியன் திர்ஹமை ஒதுக்கியிருப்பதாக தெரிவித்துள்ளது.

இருப்பினும், அஃப்தால் கார்டின் மூலம் எவ்வளவு திர்ஹம் வரை செலவு செய்யலாம் என்பது குறித்த தகவல் வெளியிடப்படவில்லை.

யூனியன் கோஆப்பின் தலைமை நிர்வாக அதிகாரி காலித் ஹுமைத் பின் திபான் அல் ஃபலாசி கூறுகையில், “யூனியன் கோஆப் 20,000 பொருட்களுக்கான விலைகளை 100 நாட்களுக்கு குறைக்கும். இதில், அரிசி, இறைச்சி, கோழி, உணவு, பழங்கள், காய்கறிகள் உள்ளிட்ட அடிப்படை உணவு மற்றும் நுகர்வோர் பொருட்கள் உட்பட பல பொருட்களுக்கு 50 சதவீதத்திற்கும் அதிகமான தள்ளுபடி வழங்குகிறது” என தெரிவித்துள்ளார். 

மேலும் நாட்டின் கலாச்சார மற்றும் மக்கள்தொகை பன்முகத்தன்மையை கணக்கில் எடுத்துக்கொண்டு இந்த விளம்பர பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

யூனியன் கோஆப் நிறுவனம் அமீரக தேசிய தினத்தை முன்னிட்டு 50 நாட்களுக்கு அதன் ஆன்லைன் ஸ்டோர் மூலம் செய்யப்படும் அனைத்து ஆர்டர்களுக்கும் இலவச டெலிவரியை தொடங்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!