அமீரக செய்திகள்

UAE: 40 நாட்கள் துக்க அனுசரிப்பு இன்றுடன் முடிவு..!! ஜனாதிபதி விவகார அமைச்சகம் தகவல்..!!

அமீரக அதிபராக பல ஆண்டுகள் பதவி வகித்த மாண்புமிகு ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் அவர்கள் கடந்த மே மாதம் 13 ம் தேதி மரணமடைந்தார். அவரது மறைவைத் தொடர்ந்து உத்தியோகபூர்வ துக்கக் காலம் 40 நாட்கள் கடைபிடிக்கப்படும் என அமீரக அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் இது ஜூன் 21 செவ்வாய்க்கிழமையுடன் (இன்று) முடிவடையும் என்று ஜனாதிபதி விவகார அமைச்சகம் (MoPA) அறிவித்துள்ளது.

இந்த 40 நாட்களும் அமீரக கொடியானது அரை கம்பத்தில் பறக்க விடப்பட்ட நிலையில் நாளை புதன்கிழமை, ஜூன் 22, காலை 9 மணி முதல் மீண்டும் கம்பத்தின் உச்சியில் கொடியேற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேக் கலீஃபாவின் மரணத்தைத் தொடர்ந்து அபுதாபியின் இளவரசராக இருந்த மாண்புமிகு ஷேக் முகம்மது பின் சையத் அல் நஹ்யான் அவர்கள் அதிபராக பதவி வகிப்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!