அமீரக செய்திகள்

UAE: பெயிண்ட் தொழிற்சாலையில் ஏற்பட்ட மாபெரும் தீவிபத்து..!! தீவிபத்துகளை தவிர்க்க ஆய்வுகளை மேற்கொள்ளவிருக்கும் அதிகாரிகள்..!!

அமீரகத்தில் கோடைகாலம் ஆரம்பித்தைத் தொடர்ந்து வெயில் அதிகரிப்பதன் காரணமாக  சில நேரங்களில் தீவிபத்து ஏற்படுகின்றது. அதற்கு உதாரணமாக ஷார்ஜாவில் இருக்கக்கூடிய அல் ஹம்ரியாவில் உள்ள ஒரு தொழிற்சாலையில் புதன்கிழமை மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீவிபத்தை அறிந்த தீயணைப்புப் படையினர் உடனடியாக சம்பவ இடத்தை அடைந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இந்த சம்பவத்தையடுத்து கோடை காலத்தில் அதிகரிக்கும் இதுமாதிரியான தீ விபத்துக்களைக் குறைக்க ஷார்ஜா சிவில் பாதுகாப்புத் துறை வியாழக்கிழமை தனது ஆய்வுகளை தீவிரப்படுத்தியுள்ளது. உயர் அதிகாரி ஒருவரின் கூற்றுப்படி, தீ விபத்துகளின் எண்ணிக்கையை பூஜ்ஜியமாகக் குறைக்க திட்டங்கள் மற்றும் இலக்குகளை துறை வகுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்தத் திட்டங்களில் வணிக, தொழில்துறை நிறுவனங்கள் மற்றும் குடியிருப்பு கட்டிடங்களை இலக்காகக் கொண்ட  வழக்கமான ஆய்வுகள் அடங்கும் என கூறப்பட்டுள்ளது. தீ விபத்திற்கான பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றுவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தீவிர விழிப்புணர்வு பிரச்சாரங்களும் இதில் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரி மேலும் கூறுகையில் இந்த தீ விபத்து பெரும்பாலும் மனிதர்களின் அஜாக்கிரதையால் ஏற்படுகிறது என்றும் சமூகத்தின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பை அச்சுறுத்தும் தீ பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் குறித்த விழிப்புணர்வு பலருக்கு இல்லை என்றும் தெரிவித்துள்ளார். இந்த அபாயங்களைத் தவிர்ப்பதற்காக சிவில் பாதுகாப்புத் துறை வழக்கமான மற்றும் முன்னறிவிப்பு இல்லாத ஆய்வுகளில் மேற்கொண்ட தொடர்ச்சியான முயற்சிகளால் கடந்த ஆண்டுகளில் ஷார்ஜா எமிரேட்டில் தீ விபத்துக்கள் குறைவதற்கு முக்கிய பங்காற்றியதாக கூறியுள்ளார். தொடர்ந்து  அலட்சியத்தால் ஏற்படும் தீ விபத்துகளைத் தவிர்க்க, குறிப்பாக கோடை காலத்தில் தடுப்பு மற்றும் பாதுகாப்பு தேவைகளை முறையாக கடைபிடிக்குமாறும் அவர் மக்களை கேட்டுக்கொண்டுள்ளார். 

Related Articles

Back to top button
error: Content is protected !!