அமீரக செய்திகள்

செல்ஃபி எடுப்பதன் மூலம் 1 மில்லியன் திர்ஹம் வெல்லும் வாய்ப்பு.. மால் மில்லியனர் ரேஃபிள் ப்ரோமோஷனை தொடங்கிய லுலு குழுமம்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் செல்ஃபி எடுப்பதன் மூலம், 1 மில்லியன் திர்ஹம் ரொக்கப் பரிசை வெல்வதற்கான வாய்ப்பைப் பெறலாம் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ஆம், உங்கள் செல்ஃபி கிளிக் வெற்றி பெற்றால், 1 மில்லியன் திர்ஹம் வழங்கும் அபுதாபி டிராவின் இலவச ரேஃபிள் டிக்கெட்டை நீங்களும் பெறலாம்.

அமீரகத்தின் பிரபல ஹைப்பர்மார்க்கெட் நிறுவனமான லுலு குழுமம் அதன் ‘மால் மில்லியனர்’ ரேஃபிள் ப்ரோமோஷனின் மூன்றாவது பதிப்பை சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் ஜனவரி 6 ஆம் தேதி வரையில் லுலுவிற்கு சொந்தமான 13 ஷாப்பிங் மால்களில் 200 திர்ஹமிற்கு ஷாப்பிங் செய்பவர்கள் டிராவில் நுழைய தகுதியுடையவர்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதேபோன்று இந்த மால்களுக்கு செல்பவர்களும் எதையும் செலவு செய்யாமலேயே பரிசுத்தொகையை வெல்வதற்கான ரேஃபிள் டிரா டிக்கெட்டையும் பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, பார்வையாளர்கள் மால்களில் அமைக்கப்பட்டுள்ள செல்ஃபி ஸ்டேஷன்களில், தங்கள் குடும்பத்தினருடன் ஒரு செல்ஃபியை கிளிக் செய்து, அதை இன்ஸ்டாகிராம் ஸ்டோரிகளில் பதிவிட்டு, #mallmillionaire3.0 என்ற ஹேஷ்டேக் மற்றும் மாலின் பெயரைப் பயன்படுத்தி அந்தந்த மால்களை டேக் செய்ய வேண்டும்.

மால் நிர்வாகம் இந்த செல்ஃபி போட்டியில் வெற்றி பெறும் வெற்றியாளரைத் தேர்ந்தெடுக்கும் மற்றும் ரேஃபிள் டிரா டிக்கெட்டின் பதிவு நோக்கங்களுக்காக அவர்களைத் தொடர்பு கொள்ளும். அத்துடன், ஷாப்பிங் செய்பவர்கள் மின்சார வாகனங்கள், வாராந்திர மற்றும் தினசரி பரிசுகள், 20,000 திர்ஹம்ஸ் மதிப்புள்ள Laka பரிசு அட்டைகள் மற்றும் பலவற்றையும் வெல்லலாம்.

லுலு குழுமத்தின் இந்த 13 மால்களும் கவர்ச்சிகரமான ஒப்பந்தங்கள் மற்றும் தள்ளுபடிகள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், குளிர்காலம் சார்ந்த அலங்காரங்கள் மற்றும் செயல்பாடுகளை வழங்கும் கூறப்பட்டுள்ளது. கூடுதலாக, டிசம்பர் 22 முதல் 24 வரை, பண்டிகை விற்பனையின் ஒரு பகுதியாக மால்களில் 90 சதவீதம் வரை தள்ளுபடியும் வழங்கப்படும் எனவும் லுலு குழுமம் தெரிவித்துள்ளது.

எனவே, ‘மால் மில்லியனர்’ பிரச்சாரத்தின் இந்தப் பதிப்பு, அபுதாபி, அல் அய்ன் மற்றும் அல் தஃப்ராவில் உள்ள லுலு குழுமத்திற்கு சொந்தமான 13 மால்களில் ஒரு அற்புதமான ஷாப்பிங் அனுபவமாக இருக்கும் என்று லுலு குழுமத்தின் ஷாப்பிங் மால் மேம்பாடு மற்றும் லைன் இன்வெஸ்ட்மென்ட்ஸ் அண்ட் ப்ராப்பர்டியின் இயக்குனர் வஜேப் அல் கௌரி என்பவர் கூறியுள்ளார்.

பங்கேற்கும் மால்கள்:

  1. அல் வஹ்தா மால் (Al Wahda Mall)
  2. முஷ்ரிஃப் மால் (Mushrif Mall)
  3. கலிதியா மால் (Khalidiya Mall)
  4. அல் ரஹா மால் (Al Raha Mall)
  5. மஸ்யாத் மால் (Mazyad Mall)
  6. ஃபோர்சன் சென்ட்ரல் மால் (Forsan Central Mall)
  7. அல் ஃபலாஹ் சென்ட்ரல் மால் (Al Falah Mall)
  8. மதீனத் சயீத் ஷாப்பிங் சென்டர் மற்றும் கோல்ட் சென்டர் (Madinat Zayed Shopping Center)
  9. ஹமீம் மால் (Hameem Mall)
  10. மஃப்ரக் மால் (Mafraq Mall)
  11. அல் அய்னில் உள்ள அல் ஃபொஹா மால் (Al Foahh Mall)
  12. பராரி அவுட்லெட் மால் (Barari Outlet Mall)
  13. அல் தஃப்ரா மால் (Al Dhafrah Mall)

ரேஃபிள் டிரா:

ஷாப்பிங் செய்பவர்கள் ஒரு மாலின் எந்தவொரு கடையிலும் குறைந்தபட்சம் 200 திர்ஹம்  செலவழிக்க வேண்டும் மற்றும் டிராவில் நுழைவதற்கு வாடிக்கையாளர் சேவை மையத்தில் ஒரு ரசீதை சமர்ப்பிக்க வேண்டும். ஒரே மாலின் வெவ்வேறு அவுட்லெட்டுகளின் பில்களை ஒருங்கிணைத்தும் 200 திர்ஹம்களுக்கான ரேஃபிளை பெறலாம். இருப்பினும், வெவ்வேறு மால்களின் பில்களை பயண்படுத்த முடியாது.

அதேபோன்று இந்த ப்ரோமோஷன், சேவை நிலையங்கள், பணப் பரிமாற்றங்கள், வங்கிகள், ஏடிஎம்கள் மற்றும் பிற பில்/பயன்பாட்டுப் பணம் செலுத்தும் கியோஸ்க்குகளுக்கு பொருந்தாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!