அமீரக செய்திகள்

ரமலான்-2021 : அமீரகம் முழுவதும் விதிக்கப்பட்டிருக்கும் கொரோனா விதிமுறைகளுக்கான முழு பட்டியல்..!!

உலகெங்கிலும் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாத நிலையில், தற்பொழுது கொரோனாவிற்கு மத்தியில் இரண்டாவது ஆண்டாக இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாதம் விரைவில் துவங்கவிருக்கின்றது. கொரோனாவிற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி கடந்த ஆண்டு ரமலான் மாதம் முடிந்த நிலையில், தற்பொழுது இந்த ஆண்டும் கொரோனாவிற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ரமலான் மாதத்தில் பின்பற்ற வேண்டிய நிலையே நீடிக்கின்றது.

ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் ரமலான் மாதத்தில் பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அமீரக அதிகாரிகள் சமீபத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த விதிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் குடியிருப்பாளர்கள் கொரோனா வைரஸிலிருந்து பாதுகாப்பாக இருக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கடந்த ஆண்டைப் போல் அல்லாமல் இந்த ஆண்டு மசூதிகள் திறக்கப்பட்டுள்ளன. மேலும், தராவீஹ் தொழுகை நடத்துவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அமீரகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் விதிக்கப்பட்டிருக்கும் கொரோனா விதிமுறைகளுக்கான முழு பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் விதிக்கப்பட்டிருக்கும் பொதுவான விதிமுறைகள்

  • புனித ரமலான் மாதத்தில் நிகழ்த்தப்படும் சிறப்பு தராவீஹ் தொழுகையானது நாடு முழுவதும் உள்ள மசூதிகளில் நடத்தப்படும். இருப்பினும் பெண்களுக்கான தொழுகை அறைகள் மூடப்பட்டிருக்கும்
  • கூட்டமாக ஒன்றிணைவதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக இப்தார் நேரத்தில் ஒன்று கூடுவதை தவிர்க்க வேண்டும்.
  • ஒரே வீட்டில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே உணவைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
  • இப்தார் கூடாரங்கள் தடை செய்யப்பட்டுள்ளன.
  • மசூதிகளுக்குள் இப்தார் உணவு அனுமதிக்கப்படாது.
  • இப்தார் உணவை உணவகங்கள் தங்களின் வளாகத்திற்குள் அல்லது உணவகத்திற்கு முன்னால் விநியோகிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

துபாய்

  • பெரியளவிலான சமூகக் கூட்டங்கள் தவிர்க்கப்பட வேண்டும்
  • ரமலான் கூடாரங்கள் மற்றும் இப்தார் மற்றும் நன்கொடை கூடாரங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன
  • பாதுகாப்பு நடவடிக்கைகள் முறையாகக் கடைபிடிக்கப்பட்டு தாராவீஹ் தொழுகை மசூதிகளில் நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஷார்ஜா

  • இப்தார் கூடாரங்கள் தடை செய்யப்பட்டுள்ளன.
  • இப்தார் விருந்துகள் மற்றும் வீடுகள் மற்றும் மசூதிகள், கார்கள், உணவகங்களுக்கு முன்னால் அல்லது வேறு எந்த வழிகளிலும் இப்தார் உணவை விநியோகிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது
  • இப்தார் உணவுக்கான சிறப்பு விளம்பர சலுகைகள் அனுமதிக்கப்படாது.
  • ஷார்ஜாவில் அங்கீகாரம் பெற்ற உத்தியோகபூர்வ தொண்டு நிறுவனங்கள் மூலமாக மட்டுமே இலவச உணவு விநியோகம் செய்ய அனுமதிக்கப்படும்.

அஜ்மான்

  • ரமலான் கூடாரங்களுக்கான அனைத்து அனுமதிகளும் ரத்து செய்யப்பட்டன.
  • அஜ்மானில் பதிவுசெய்யப்பட்ட தொண்டு நிறுவனங்களால் பாதுகாப்பான முறையில் இப்தார் உணவு விநியோகிக்க அனுமதி வழங்கப்படும்.
  • இதுபோன்ற உணவு விநியோகம் அஸ்ர் தொழுகைக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்டு மக்ரிப் தொழுகைக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே முடிக்க வேண்டும்.

ராஸ் அல் கைமா

  • உணவகங்களுக்குள் அல்லது உணவகங்களுக்கு முன்னால் இப்தார் உணவு விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளது.
  • மசூதிகளுக்கு வெளியே இப்தார் கூடாரங்களும் தடை செய்யப்பட்டுள்ளன.
  • வீடுகளுக்கு வெளியே உணவை விநியோகிக்க முடியாது
  • குடியிருப்பு தொழிலாளர் வளாகங்களில் உணவு விநியோகம் செய்ய அனுமதிக்கப்படும். இருப்பினும் விநியோகம் செய்யப்படும் உணவானது இறுக்கமாக மூடப்பட்ட பெட்டிகளிலோ அல்லது பைகளிலோ இருக்க வேண்டும்.
  • கூட்டமாக ஒன்று கூட அனுமதிக்கப்படவில்லை.

உம் அல் குவைன்

  • குர்ஆன்கள் மற்றும் பிற பரிசுகளை விநியோகிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது.
  • வீட்டு உறுப்பினர்கள் அல்லாமல் மற்றவர்கள் வீட்டிற்குள் செல்வது மற்றும் குடும்பங்கள் ஒன்றாக கூடுவது தடைசெய்யப்பட்டுள்ளன.
  • உணவை பரிமாறிக்கொள்ளவோ ​​விநியோகிக்கவோ கூடாது.
  • தொழிலாளர் தங்குமிடங்களுக்கு இப்தார் உணவை விநியோகிக்க அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு அனுமதி.
  • இப்தார் அல்லது ரமலான் கூடாரங்கள் தடை செய்யப்பட்டுள்ளன.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!