அமீரக செய்திகள்

அமீரகத்தில் வரலாறு காணாத கனமழை.. வெள்ளத்தில் சிக்கி ஏழு வெளிநாட்டவர்கள் உயிரிழப்பு..!

நாட்டின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் பெய்த கனமழையால் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து, ஆசிய நாட்டைச் சேர்ந்த ஏழு பேர் அதில் உயிரிழந்ததாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் இயக்குநர் ஜெனரல் டாக்டர் அலி சலிம் அல் துனைஜி வருத்தத்துடன் கூறினார்.

அமீரகத்தில் இரண்டு நாட்கள் மோசமான வானிலை நிலவி வரலாறு காணாத மழையும் பெய்தது. நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு எமிரேட்களில், இடைவிடாத மழையால் உள்கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டு, குடியிருப்பாளர்கள் சிக்கித் தவித்தனர். 27 ஆண்டுகளில் நாடு கண்டிராத அதிக மழையைப் பொழிவு ஃபுஜைராவில் பெய்துள்ளது. ராஸ் அல் கைமா, ஷார்ஜா மற்றும் ஃபுஜைராவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சில பகுதிகளில் அன்றாட வாழ்க்கையை மீட்டெடுப்பதற்கான முயற்சிகள் நடந்து வருவதாகவும், பாதிப்புகுள்ளான பகுதிகளில் இருந்து குடியிருப்பாளர்களை வெளியேற்றும் பணி மேற்கொண்டு வருவதாகவும் துனைஜி கூறினார்.

ராஸ் அல் கைமா, ஷார்ஜா மற்றும் புஜைராவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சில பகுதிகளில் அன்றாட வாழ்க்கையை மீட்டெடுப்பதற்கான முயற்சிகள் நடந்து வருவதாகவும் அல் துனைஜி கூறினார். “இந்தப் பகுதிகளில் சில இடங்களில் களப் பிரிவுகள் இன்னும் வெளியேற்றங்களை மேற்கொண்டு வருகின்றன. வீடுகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சில நபர்களுக்கு சில தங்குமிடங்களும் உள்ளன” என்று அந்த அதிகாரி கூறினார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மூடப்பட்ட சாலைகளை மீண்டும் திறக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. “ஃபுஜைராவையும் கோர்ஃபக்கான் நகரையும் இணைக்கும் ஒரே ஒரு பிரதான சாலை மட்டுமே திறக்கப்பட்டு உள்ளது. விரைவில் மூடப்பட்ட சாலைகள் மீண்டும் திறக்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று அல் துனைஜி மேலும் கூறினார்.

இந்த கனமழையால் நீரில் தவித்த 870 பேர் மீட்கப்பட்டதாக தேசிய அவசரநிலை, நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர். அதில் 3,897 நபர்கள் ஃபுஜைரா மற்றும் ஷார்ஜாவில் உள்ள தற்காலிக தங்குமிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Related Articles

Back to top button
error: Content is protected !!