அமீரக செய்திகள்இந்திய செய்திகள்

அமீரகத்தில் அடுத்த ஆண்டுக்குள் 10,000 இந்தியர்களுக்கு வேலை.. இந்திய துணைத் தூதரகம் எதிர்பார்ப்பு.!

2023 ஆண்டு முடிவுக்குள் அமீரகத்தில் வேலைகள் மற்றும் திறன்களுக்கான பயிற்சியான (தேஜாஸ்) திட்டத்தின் மூலம் குறைந்த பட்சம் 10,000 திறமையான இந்திய தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்கும் என இந்திய துணைத் தூதரகம் தெரிவித்துள்ளது. நேஷனல் ஸ்கில் டெவலப்மெண்ட் கார்ப்பரேஷன் (NSDC) உடன் பணிபுரியும், தூதரகம் நேர்மையற்ற ஆட்சேர்ப்பு முகவர்களைத் தவிர்ப்பதற்கும், வெளிநாட்டில் வேலை தேடுவதற்குத் தேவையான திறன்களுடன் தனது குடிமக்களுக்கு வேலைகள் வழங்கவும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

NSDC-இன் பிரதிநிதிகள் அமீரகத்தில் வேலைகளுக்கான தேவையை அளவிடுவதற்கும், ரெஸ்டாரெண்ட், சுகாதாரம் மற்றும் சில்லறை விற்பனையில் அதன் தொழிலாளர்களுக்கு தேவையான பயிற்சிகளை வழங்குவதற்கும் பணியாற்றப்படுகிறது. துபாய் EXPO 2020-இன் ஒரு பகுதியாக இந்த ஆண்டு மார்ச் மாதம் இந்த திட்டம் தொடங்கப்பட்டது.

வேலைகளின் தன்மைக்கேற்ப தேஜாஸின் பயிற்சித் திட்டங்கள் இந்தியாவிலும் துபாயிலும் நடைபெறுகிறது. “டிரைவிங் விஷயத்தில், ஐக்கிய அரபு அமீரக ஓட்டுநர் மாதிரி மற்றும் இடது கை கார்களைப் பிரதிபலிக்கும் வகையில் பயிற்சி அமைப்புகள் உருவாக்கப்படுகின்றன” என்று  தூதரகம் தெரிவித்தது. அங்கு பயிற்சி பெற்றவுடன், அவர்கள் ஓட்டுநர் உரிமத்தை மிக எளிதாக பெற முடியும்.

மேலும் இந்திய துணைத் தூதரகம் நாட்டில் உள்ள புளு காலர் தொழிலாளர்களுக்கான தொடர்ச்சியான மேம்பாட்டுத் திட்டங்களையும் நடத்தி வருகிறது. அதில், ஆங்கில மொழி மற்றும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்தியத் தொழிலாளர்களின் வேலை வாய்ப்பு போன்ற திறன்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!