அமீரக செய்திகள்

புர்ஜ் கலீஃபாவின் உச்சிக்கு செல்ல வேண்டுமா.? டிக்கெட், பார்வையிட சிறந்த நேரம் போன்ற விபரங்கள் இங்கே…

துபாயின் மணிமகுடமாக விளங்கும் உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலீஃபாவின் கம்பீரமான தோற்றத்தையும், உச்சியில் இருந்து துபாயின் பரந்து விரிந்த காட்சிகளையும் காண்பதற்கு ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான சுற்றுலாப் பயணிகள் மற்றும் குடியிருப்பாளர்கள் வருகை தருகின்றனர்.

உலகப் புகழ்பெற்ற இந்த கட்டிடத்தில் 555 மீட்டர் உயரத்தில் உள்ள ‘At the top’ எனும் வியூ பாயிண்ட் தளத்தில் இருந்து நகரின் மிரளவைக்கும் அழகிய 360 டிகிரிக் காட்சியை பார்வையாளர்கள் பார்க்கலாம். இந்த தளம் புர்ஜ் கலீஃபாவின் 148, 125 மற்றும் 124 ஆகிய மூன்று நிலைகளில் அமைந்துள்ளது.

இத்தகைய பிரம்மிப்பூட்டும் காட்சியை நீங்கள் கண்டு ரசிக்க திட்டமிட்டிருந்தால், அங்கு செல்வதற்கு முன்பாக நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விரிவான வழிகாட்டியை இங்கே காணலாம்.

டிக்கெட்:

புர்ஜ் கலீஃபாவின் ‘At the top’ தளத்திற்குச் செல்ல நீங்கள் டிக்கெட் வாங்க வேண்டும். நீங்கள் இதனை கட்டிடத்தில் உள்ள டிக்கெட் கவுண்டரில் அல்லது ஆன்லைனில் வாங்கலாம். டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடலாம். இணையதளத்தில் பல பேக்கேஜ்களை காணலாம், அவை கண்காணிப்பு தளத்தை விட அதிகமான அனுபவத்தை வழங்கும்.

விலை நிர்ணயம்

இதற்கான டிக்கெட் விலை 169 திர்ஹம்ஸிலிருந்து தொடங்குகிறது, சில பேக்கேஜ்களில் நுணிப்பகுதியில் நடக்கும் (Edge Walk) திரில்லான அனுபவம் மற்றும் ஆகாயத்தில் நடப்பது (Sky Walk) போன்ற பல்வேறு அனுபவங்களை பெறும் வசதிகளும் உள்ளன.

பார்வையிட சிறந்த நேரம்:

புர்ஜ் கலீஃபாவின் கண்காணிப்பு தளம் வேறு எங்கும் இல்லாத காட்சியை வழங்குகிறது. நீங்கள் உயரமான கட்டிடத்தில் இருந்து அற்புதமான சூரிய உதயம் அல்லது சூரிய அஸ்தமனத்தைக் காணலாம். அங்கு ஆரஞ்சு நிற ஒளியில் மேகங்கள் ஒளிர்வதைக் காணலாம். சூரிய உதயத்தைப் பார்க்க, இணையதளத்தில் ‘சன்ரைஸ் பேக்கேஜ் (Sunrise Package)’ என்பதைத் தேர்ந்தெடுத்து, காலை 5 மணி முதல் 7.30 மணிக்குள் சென்று பார்க்கவும்.

எப்படி செல்வது?

1. டாக்ஸி:

நீங்கள் அங்கு செல்ல ஒரு டாக்ஸியைப் பிடிக்க திட்டமிட்டால், ரைட்-ஹெய்லிங் செயலியில் புக் செய்து புர்ஜ் கலீஃபாவிற்கு செல்லலாம்.

2. மெட்ரோ:

நீங்கள் துபாய் மெட்ரோவின் ரெட் லைனில் சென்று, புர்ஜ் கலிஃபா/துபாய் மால் மெட்ரோ நிலையத்தில் இறங்கலாம். மெட்ரோ நிலையத்திலிருந்து புர்ஜ் கலிஃபாவிற்கு நேரடி அணுகல் உள்ளது. மெட்ரோவில் இருந்து வெளியேறி வலதுபுறம் திரும்பும்போது, ​​’At The Top’ என்று எழுதப்பட்ட போர்டுடன் தனி நுழைவாயிலைக் காணலாம்.

3. சொந்த வாகனம்:

புர்ஜ் கலீஃபா ஷேக் சையத் சாலையில் 1 வது இன்டர்சேஞ்சிற்கு அருகில் அமைந்துள்ளது. 1வது இன்டர்சேஞ்ச் வழியாக பைனான்சியல் சென்டர் ரோடு வழியாக செல்லவும். மேலும் காரை பார்க்கிங் செய்வதற்கு துபாய் மால், ஃபேஷன் அவென்யூ கார் நிறுத்துமிடத்தில் பார்க்கிங் வசதியும் உள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!