அமீரகத்தில் இதையெல்லாம் போட்டோ எடுத்தால் என்ன தண்டனை தெரியுமா..? சட்டம் கூறுவது என்ன..?

அமீரகத்தில் பொதுவெளியில் எதை புகைப்படம் எடுக்கலாமா? எதை எடுக்ககூடாது? என்பதை தெரிந்து கொள்ள வேண்டிய விதிகள் குறித்து பார்ப்போம். போட்டோ எடுத்துக்கொள்ள மிகச்சிறந்த சுற்றுலாத் தளங்களை கொண்ட அமீரகத்தில் போட்டோக்கள் எடுக்ககூடாது என்ற கட்டுப்பாடுகள் உள்ளன. தனிநபர்களின் அனுமதியில்லாமல் அவர்களை படம்பிடிப்பதும், தவறான எண்ணத்தோடு அப்படங்களை ஊடகங்களில் பகிர்வதும் அமீரகத்தின் சைபர் கிரைம் சம்பந்தப்பட்ட விதிகளின் கீழ் கடுமையான தண்டனைக்குரியதாகும்.
விபத்துக்களை புகைப்படம் எடுக்ககூடாது
விபத்துக்களின் புகைப்படங்களைப் பகிர வேண்டாம் என்று காவல்துறையினர் அறிவுறுத்தியிருந்தனர். இது குறித்துப் கூறிய அபுதாபி காவல்துறை கட்டுப்பாட்டுப் பிரிவின் இயக்குநர் மேஜர் ஜெனரல் சலீம் ஷாஹீன் அல் நுவைமி இணையதளம் முழுவதும் பொய்யான செய்திகளால் நிறைந்தது. எனவே இணைய வாசிகள் எதையேனும் பகிர்வதற்கு முன்னர் அதன் உண்மைத்தன்மையை உறுதி செய்துகொள்ள வேண்டும். சட்டத்தை மீறுவோருக்கு எவ்வித மன்னிப்பும் இல்லை” என்றும் இது போன்ற செயல்கள் நிச்சயம் சட்டத்தின் தாக்கத்திற்குட்பட்டது என்றும் எச்சரிக்கையும் விடுத்தார்.
வாகனம் ஓட்டும்போது புகைப்படம் எடுக்ககூடாது
வாகன ஓட்டிகள் தாங்கள் வாகனம் ஓட்டும்போது படங்கள் எடுப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது. மீறுவோர் 800 திர்ஹம்ஸ் வரை அபராதம் செலுத்த நேரிடுவதோடு நான்கு பிளாக் மார்க்கும் விதிக்கப்பாடும் பெறக்கூடும்.
சட்டம் கூறுவது என்ன?
அமீரகத்தின் சைபர் குற்றத்திற்கான சட்டத்தின் 21 வது விதியானது “பிறரின் ப்ரைவசியினை மீறி, தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி அவர்களை படம்பிடித்தல், படமாக சித்தரித்தல், அதனை பரிமாறுதல், வெளியிடுதல், நகலெடுத்தல், மின்னணு படங்களை சேமித்து வைத்தல் ஆகியவை குற்றங்களாகும். இவற்றுக்கு ஆறுமாத கால சிறை மற்றும் 150,000 திர்ஹம்ஸ் முதல் மற்றும் 500,000 திர்ஹம்ஸுக்கும் மிகாமல் அபராதமும் விதிக்கப்படும்.
எனவே அடுத்தமுறை கேமராவை எடுப்பதற்கு முன்னர், மேற்கண்ட சட்டங்களை மனதில் வைத்துக்கொண்டு புகைப்படம் எடுங்கள்.