அமீரக செய்திகள்

UAE: போக்குவரத்து அபராதத்தில் 50% தள்ளுபடி அறிவித்த 4 எமிரேட்.. எப்போது வரை..?? விபரங்கள் உள்ளே..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் வரவிருக்கும் 50 வது தேசிய தினத்தை முன்னிட்டு அமீரகத்தில் உள்ள நான்கு எமிரேட்டுகளில் போக்குவரத்து அபராதங்களில் 50 சதவீத தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஷார்ஜா, அஜ்மானில் அபராத தள்ளுபடி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்பொழுதுஉம் அல் குவைன் மற்றும் ஃபுஜைராவில் போக்குவரத்து அபராதத்தில் 50 சதவிகிதம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

குடியிருப்பாளர்கள் எதிர்கொள்ளும் நிதிச் சுமையை எளிதாக்குவது மற்றும் அவர்களின் அபராதங்களைத் தீர்க்க உதவுவதை இந்த முடிவு நோக்கமாகக் கொண்டுள்ளது. நான்கு எமிரேட்களிலும் அபராதத் தள்ளுபடி விகிதம் ஒரே மாதிரியாக இருந்தாலும், தேதிகளில் சில வேறுபாடுகள் உள்ளன.

இது குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது

குடியிருப்பாளர்கள் தள்ளுபடி செய்யப்பட்ட அபராதங்களை எப்போது செலுத்தலாம்?

ஷார்ஜா: நவம்பர் 21, 2021 முதல் ஜனவரி 31, 2022 வரை.

அஜ்மான்: நவம்பர் 21 முதல் டிசம்பர் 31 வரை.

உம் அல் குவைன்: டிசம்பர் 1, 2021 முதல் ஜனவரி 6, 2022 வரை.

ஃபுஜைரா: நவம்பர் 28, 2021 முதல் 50 நாட்களுக்கு

எந்த தேதியில் பதிவு செய்யப்பட்ட மீறல்களுக்கு தள்ளுபடி பொருந்தும்?

போக்குவரத்து விதி மீறல்கள் ஒரு குறிப்பிட்ட தேதிக்கு முன் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

ஷார்ஜா: நவம்பர் 21 க்கு முன் பதிவு செய்யப்பட்ட மீறல்களுக்கு தள்ளுபடி பொருந்தும்.

அஜ்மான்: நவம்பர் 14 க்கு முன் செய்யப்பட்ட மீறல்களுக்கு இது பொருந்தும்.

உம் அல் குவைன்: அக்டோபர் 31 க்கு முன் செய்யப்பட்ட மீறல்களுக்கு இது பொருந்தும்.

ஃபுஜைரா: நவம்பர் 25 க்கு முன் செய்யப்பட்ட மீறல்களுக்கு இது பொருந்தும்.

எந்தெந்த குற்றங்கள் தள்ளுபடி திட்டத்தின் கீழ் வராது?

கடுமையான குற்றங்கள் இத்திட்டத்தின் கீழ் வராது.

ஷார்ஜா: ரெட் சிக்னலின் போது வாகனத்தை ஓட்டுதல், சாலையைப் பயன்படுத்துபவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் கவனக்குறைவாக வாகனம் ஓட்டுவது.

அஜ்மான்: – மற்றவர்களை ஆபத்தில் ஆழ்த்தும் வகையில் கவனக்குறைவாக வாகனம் ஓட்டுவது, உரிமம் இல்லாமல் வாகனத்தின் இயந்திரத்தை மாற்றுதல்.

உம் அல் குவைன்: சாலையைப் பயன்படுத்துபவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் கவனக்குறைவாக வாகனம் ஓட்டுவது, அனுமதியின்றி வாகனத்தின் இயந்திரத்தை மாற்றுதல், கொரோனா பாதுகாப்பு விதிகளை மீறுதல்.

ஃபுஜைரா: போக்குவரத்து சிக்னலை மதிக்காமல் வாகனம் ஓட்டுதல், கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல், உரிமம் இல்லாமல் வாகன இயந்திரத்தை மாற்றுதல்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!