அமீரக செய்திகள்

அய்ன் துபாயின் தற்காலிக மூடல் அடுத்த ஆண்டு வரை நீட்டிப்பு..!!

உலகின் மிகப்பெரிய ஃபெர்ரி வீலான அய்ன் துபாய் மேம்பாட்டு பணிகளுக்காக கடந்த சில மாதங்களாக மூடப்பட்டிருந்த நிலையில், இந்த மூடலானது அடுத்த வருடத்தின் முதல் காலாண்டு வரை நீடிக்கும் என தற்பொழுது தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அதிகாரப்பூர்வ இணையதளத்தின் ஒரு அறிக்கையில், “கடந்த சில மாதங்களாக மேம்படுத்தும் பணிகளை முடிக்க நாங்கள் கடுமையாக உழைத்து வருகிறோம். மீண்டும் திறக்கப்படும் தேதி முடிவு செய்யப்பட்டவுடன், மறு அறிவிப்பு வெளியிடப்படும்.” என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் “பார்வையாளர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தை வழங்குவதற்கான எங்கள் உறுதிப்பாட்டிற்கு இணங்க, உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்கள் அனுபவிக்கும் வகையில் அய்ன் துபாயை நாங்கள் மீண்டும் திறக்கும்போது புதிய மற்றும் அற்புதமான சலுகைகளை அறிமுகப்படுத்த உள்ளோம்” எனவும் கூறப்பட்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய ஃபெர்ரி வீலான அய்ன் துபாய் மேம்படுத்தும் பணிகளுக்காக கடந்த மார்ச் மாதம் முதன்முதலில் மூடப்பட்டது. அத்துடன் இந்த மூடலானது ரமலான் மாதம் முழுவதும் நீடிக்கும் எனவும் கூறப்பட்டது.

ஆனால் சமீபத்திய புதுப்பிப்பின் படி இந்த தற்காலிக மூடலானது மேலும் நீட்டிக்கப்பட்டு, மீண்டும் திறக்கும் தேதி முடிவு செய்யப்பட்டவுடன் மறு அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

துபாயின் புளூவாட்டர்ஸ் தீவில் அமைந்துள்ள இந்த அய்ன் துபாய் கடந்த ஆண்டு அக்டோபர் 21 ஆம் தேதி பொதுமக்களுக்கு திறக்கப்பட்டது. 250 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்ட இந்த அய்ன் துபாயின் கண்காணிப்பு அறைகள் பார்வையாளர்களுக்கு துபாயின் 360 டிகிரி காட்சிகளை காண சிறந்த வாய்ப்பை வழங்குகின்றன. மேலும் இதில் ஒரு முழுமையான சுழற்சி முடிய 38 நிமிடங்கள் எடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!