அமீரக செய்திகள்

அபுதாபி பார்க்கிங் முறையில் மாற்றம்..!! புதிதாக அறிமுகம் செய்யப்படவுள்ள இ-டிக்கெட்..!!

அமீரகத்தில் வாகனங்களை பொது பார்க்கிங் இடத்தில் நிறுத்துவதற்கு பார்க்கிங் டிக்கெட் வாங்குவது அத்தயாவசியமானது. அதில் அமீரகத்தின் அபுதாபியில் நடைமுறையில் இருக்கும் Mawaqif பார்க்கிங் அமைப்பில் புதிய மாற்றங்கள் கொண்டு வர இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் சேவைகளின் தரத்தை மேம்படுத்தும் மற்றும் பொது பார்க்கிங் அமைப்பின் செயல்திறனை மேம்படுத்தும் நடவடிக்கையாக, அபுதாபியில் உள்ள நகராட்சிகள் மற்றும் போக்குவரத்துத் துறையின் (DMT) ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் (ITC) அனைத்து பார்க்கிங் கட்டண இயந்திரங்களையும் 5G ஸ்மார்ட் சிஸ்டத்திற்கு மேம்படுத்தும் பணியை தொடங்குவதாக அறிவித்துள்ளது.

மத்திய பார்க்கிங் மேலாண்மை அமைப்புடன் நேரடியாக இணைக்கப்பட்ட ஸ்மார்ட் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வடிவமைக்கப்பட்ட ஸ்மார்ட் டிஜிட்டல் ஒருங்கிணைந்த நெட்வொர்க் மூலம் பொது வாகன நிறுத்துமிடங்களை நிர்வகிப்பதை இந்த அமைப்பு செயல்படுத்துகிறது. இந்த புதிய மேம்படுத்தலானது காகித முறை பயன்படுத்துதலை படிப்படியாக நிறுத்தி மின்னணு முறையில் பார்க்கிங் டிக்கெட்டுகள் வழங்கப்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

பார்க்கிங் வகை, வாகனத் தகவல் (பிளேட் வகை, எண், முதலியன) பார்க்கிங் காலம் மற்றும் பொருத்தமான கட்டண முறை உள்ளிட்டவற்றைக் காட்டும் டிஜிட்டல் ஸ்க்ரீனில் விளக்கப்பட்டுள்ள சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் வாடிக்கையாளர்கள் வாகன பார்க்கிங்கிற்கான இ-டிக்கெட்டைப் பெறலாம் என கூறப்பட்டுள்ளது.

அத்துடன் Mawaqif கார்டுகள், ரொக்கம், கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகள் உட்பட பல வகையில் பணம் செலுத்தும் முறைகளையும் இது உள்ளடக்கியதாக கூறப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட் ஸ்கரீன்களானது பயனர்கள் தேவையான தகவல்களை உள்ளிடவும் மற்றும் அபுதாபி எமிரேட் முழுவதும் உள்ள அனைத்து பார்க்கிங் விருப்பங்களுக்கும் சரியான இ-டிக்கெட் வகையைத் தேர்வு செய்யவும் அனுமதிக்கிறது.

இதனடிப்படையில அபுதாபி முழுவதும் 5ஜி தொழில்நுட்பத்தின்படி இயங்கும் 1,200க்கும் மேற்பட்ட பார்க்கிங் சாதனங்கள் நிறுவப்பட்டு, இந்த ஆண்டு இறுதிக்குள் முழு செயல்முறையும் முடிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!