அமீரக செய்திகள்

அமீரகத்தில் நிலவும் மூடுபனி.. மஞ்சள் எச்சரிக்கை விடுத்த தேசிய வானிலை மையம்..!!

அமீரகத்தில் கடந்த சில நாட்களாகவே வெப்பநிலை குறைந்து பெரும்பாலான பகுதிகளில் தினசரி மூடுபனி இரவிலும் அதிகாலையிலும் மூடுபனி நிலவி வருகிறது. இந்நிலையில் அமீரகத்தில் இன்றும் மூடுபனி நிலவி வருவதால் அது சாலைகளில் கிடைமட்ட தெரிவுநிலையை (visibility) பாதிக்கிறது என அமீரகத்தின் தேசிய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மூடுபனி நிலவி வருவதால் வாகனங்களை ஓட்டும் போது வாகன ஓட்டிகள் கவனமாக செயற்படுமாறும், வேகத்தடைகளை மாற்றுவதில் கவனம் செலுத்துமாறும் காவல்துறையினர் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) பனிமூட்டம் தொடர்பாக சிவப்பு மற்றும் மஞ்சள் எச்சரிக்கையையும் விடுத்துள்ளது. மேலும் இன்று இரவு மற்றும் திங்கள் காலை வேளைகளில் வானிலை ஈரப்பதத்துடன் இருக்கும் மற்றும் நாட்டின் கடலோர மற்றும் உள் பகுதிகளில் மூடுபனிக்கு வாய்ப்பும் உள்ளதாக கூறியுள்ளது.

அத்துடன் அபுதாபியில் அதிகபட்சமாக 37 டிகிரி செல்சியஸ் மற்றும் துபாயில் அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. அதேபோல் குறைந்தபட்சமாக அபுதாபியில் 27 டிகிரி செல்சியஸ் மற்றும் துபாயில் 26 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் காற்று லேசானது முதல் மிதமான வேகத்தில் வீசும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. அமீரகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர்தான் கோடைகாலம் முடிவடைந்து இலையுதிர் காலம் தொடங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!