அமீரக செய்திகள்

கொர்ஃபக்கான் சாலையில் புதிய ஓய்வு இடம்..!! வெளிப்புற திரையரங்குடன் ஏராளமான கடைகள் மற்றும் உணவகங்களைக் கொண்ட இடத்தை திறந்து வைத்த ஷார்ஜா ஆட்சியாளர்..

ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தவும், குடியிருப்பாளர்களின் வாழ்வியலை வசதியானதாக மாற்றவும் பல்வேறு திட்டங்களும் உள்கட்டமைப்பு முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. அந்த வகையில், இப்போது ஷார்ஜா எமிரேட்டில் புதிதாக குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்காகவே என பிரத்யேகமாக ஓய்வு இடம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் சுப்ரீம் கவுன்சில் உறுப்பினரும், ஷார்ஜாவின் ஆட்சியாளருமான ஷேக் டாக்டர் சுல்தான் பின் முஹம்மது அல் காசிமி அவர்கள், ஷார்ஜாவில் 58 கடைகள், வெளிப்புற திரையரங்குகளுடன் கூடிய ‘Shees Rest Area’ என்றழைக்கப்படும் புதிய ஓய்வு இடத்தை வெள்ளிக்கிழமையன்று (அக்டோபர் 27) திறந்து வைத்துள்ளார்.

இந்த புதிய இடமானது, கோர் ஃபக்கான் – ஷார்ஜா சாலையில் உள்ள ரோக் சுரங்கத்தை (Rogue Tunnel) அடுத்துள்ள பகுதியில் அமைந்துள்ளது. இங்கு மளிகைப் பொருட்கள் முதல் வாசனை திரவியங்கள் வரை பலவிதமான பொருட்களை விற்கும் 58 கடைகள் உள்ளன.

அத்துடன் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் வரும் பார்வையாளர்கள் அங்குள்ள உணவகங்கள் மற்றும் கஃபேக்களில் விரும்பியதை ருசித்து மகிழலாம்.

புதிய ஓய்வு இடத்தில் என்னென்ன உள்ளது?

ஒரே நேரத்தில் 80 பேருக்கு இடமளிக்கக் கூடிய சுமார் 430 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள நிழலிடப்பட்ட வெளிப்புற தியேட்டர் மற்றும் 600 சதுர மீட்டர் பரப்பளவில் குழந்தைகள் விளையாடும் இடம் அமைக்கப்பட்டுள்ளன.

இது பொழுதுபோக்கு இடமாக மட்டுமில்லாமல், ஷீஸ் மற்றும் அல் நஹ்வா பகுதிகளில் வசிக்கும் குடிமக்களுக்கு வாழ்வாதார இடமாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. ஏனெனில், இங்கு தினசரி தேவையான அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் வரிசையாக உள்ளன.

தனித்துவமான டெஸ்டினேஷன்:

புதிய ஷீஸ் ரெஸ்ட் ஏரியா, குளிர்ந்த காலநிலையை அனுபவிக்க விரும்புவோருக்கு சிறந்த இடமாகும். மேலும், வாகன ஓட்டிகள் கோர் ஃபக்கான் சாலை வழியாக கம்பீரமான மலைகளின் அழகை ரசித்தவாறே செல்லலாம். இப்பகுதி, பூக்கள் மற்றும் பசுமையால் சூழப்பட்டுள்ளது. எனவே, பார்வையாளர்கள் கண்ணுக்கு இனிய காட்சிகளை ரசிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

 

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!