அமீரக செய்திகள்

உலகளாவிய சுற்றுலாத் துறையில் முன்னணியில் உள்ள துபாய்..!! கடந்த ஆண்டு மட்டும் 17 மில்லியன் சர்வதேச பார்வையாளர்களை வரவேற்று சாதனை….

கடந்த ஆண்டான 2023 இல் சுமார் 17 மில்லியன் சர்வதேச பார்வையாளர்களை வரவேற்று சுற்றுலாத்துறையில் துபாய் நகரமானது புதிய சாதனை படைத்துள்ளது. இது குறித்த அறிவிப்பை துபாயின் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள், இன்று X தளத்தில் வெளியிட்டிருந்தார்.

அந்த பதிவில், துபாய் உலகளாவிய சுற்றுலாத் துறையில் முன்னணியில் இருப்பதாகவும், உலகின் மிக உயர்ந்த ஹோட்டல் ஆக்கிரமிப்பு விகிதங்களில் 77.4 சதவிகிதம் இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். அத்துடன் ஹோட்டல் திறன் 150,000 அறைகளுக்கு மேல் உள்ளதாகவும் கூறியுள்ளார்.

அது மட்டுமல்லாமல், துபாய் பொருளாதார நிகழ்ச்சி நிரல் D33 (Dubai Economic Agenda D33), வணிகம் மற்றும் சுற்றுலாவுக்கான முதல் 3 நகரங்களில் ஒன்றாக துபாயை நிலைநிறுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!