அமீரக செய்திகள்

துபாய்: 4 புதிய பேருந்து வழித்தடங்களை அறிவித்த RTA..!! பழைய வழித்தடங்களிலும் மாற்றம்..!!

துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) துபாயில் நான்கு புதிய பொதுப் பேருந்து வழித்தடங்களைத் தொடங்க இருப்பதாகவும் மேலும் ஏழு வழிகளை மேம்படுத்த இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையானது துபாயினுள் பஸ் நெட்வொர்க்கின் கவரேஜை விரிவுபடுத்துவதையும், துபாய் எமிரேட்டின் வெகுஜன போக்குவரத்து வழிமுறைகளை ஒருங்கிணைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த புதிய மாற்றங்களானது நவம்பர் 18 முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

புதிய பேருந்து வழித்தடங்கள்:

ரூட் 18 (அல் நஹ்தா 1 – அல் முஹைஸ்னா 4)

அல் நஹ்தா 1 மற்றும் அல் முஹைஸ்னா 4 ஆகிய குடியிருப்பு பகுதிகளை இணைக்கும் புதிய பேருந்து சேவை இதுவாகும். இந்த வழித்தடம் 20 நிமிட இடைவெளியில் போக்குவரத்து அதிகமுள்ள நேரங்களான பீக் ஹவர்ஸில் (peak hours) மட்டுமே இயக்கப்படும்.

ரூட் 19 (அல் குசைஸ் – அல் நஹ்தா 1)

குடியிருப்பு பகுதிகளான அல் நஹ்தா 1 மற்றும் அல் குசைஸை இணைக்கும் புதிய பேருந்து சேவை இதுவாகும். இந்த பாதை 20 நிமிட இடைவெளியில் பீக் ஹவர்ஸில் மட்டுமே இயக்கப்படும்.

ரூட் F29 (Equiti Metro Station – Al Wasl)

ஈக்விட்டி மெட்ரோ நிலையம் (வடக்கு) மற்றும் அல் வாஸ்ல் சாலைக்கு இடையே 20 நிமிட இடைவெளியில் இயக்கப்படவுள்ள புதிய மெட்ரோ இணைப்பு பேருந்து சேவை இதுவாகும்.

ரூட் DWC1 (அல் மக்தூம் சர்வதேச விமான நிலைய வருகை – இபின் பத்தூதா பேருந்து நிலையம்)

அல் மக்தூம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து இயக்கப்படும் புதிய பேருந்து சேவை இதுவாகும். இது இபின் பத்தூதா பேருந்து நிலையத்திற்கு செல்லும் வழியில் எக்ஸ்போ 2020 ஸ்டேஷன் வழியாக செல்லும் என கூறப்பட்டுள்ளது. இந்த பாதை தினமும், ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் என 24 மணி நேரமும் இயங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

எக்ஸ்போ 2020 நிலையத்திற்குச் செல்வதற்கு நிலையான கட்டணமாக 5 திர்ஹம்ஸூம், இபின் பத்தூதா பேருந்து நிலையத்திற்கு 7.5 திர்ஹம்ஸூம் கட்டணமாக வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ரூட் DWC1 டிசம்பர் 20, 2022 வரை மட்டுமே இயங்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

அத்துடன் நவம்பர் 18 ஆம் தேதி முதல், RTA துபாயில் உள்ள மற்ற 7 வழித்தடங்களிலும் மாற்றங்களை அறிமுகப்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவை பின்வருமாறு:

>> ரூட் F10 துபாய் சஃபாரி பூங்கா வரை நீட்டிக்கப்படும்

>> ரூட் F20 அல் சஃபா மெட்ரோ நிலையத்திலிருந்து வடக்கு நோக்கி அல் வாஸ்ல் சாலை வழியாக செல்லும் வகையில்  நீட்டிக்கப்படும்.

>> ரூட் F30 துபாய் ஸ்டுடியோ சிட்டி வரை நீட்டிக்கப்படும்

>> ரூட் F32 Mudon வரை நீட்டிக்கப்படும்

>> ரூட் F50 துபாய் இன்வெஸ்ட்மென்ட் பார்க்கில் இருந்து செல்லும் வகையில் நீட்டிக்கப்படும்

>> ரூட் F53 துபாய் இண்டஸ்ட்ரியல் சிட்டி வரை நீட்டிக்கப்படும்

>> ரூட் F55 எக்ஸ்போ 2020 மெட்ரோ நிலையத்தை அடைய நீட்டிக்கப்படும். (குறிப்பு: டிசம்பர் 20, 2022க்குப் பிறகு, இந்தப் பாதை இபின் பத்தூதா நிலையத்திற்குச் செல்லாது.)

நவம்பர் 18 முதல் 48 பிற வழித்தடங்களின் கால அட்டவணையும் RTA மேம்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவை:

5, 11A, 12, 15, 17, 21, 24, 30, 32C, 44, 50, 55, 61, 63E, 64, 66, 67, 84, 91, 95A, 96, 310, 320, C01, C04, C09, C18, C26, C28, DWC1, E16, E400, E411, F01, F15, F26, F20, F21, F29, F33, F47, F48, J01, N55, X25, X64, X92, and X94.

Related Articles

Back to top button
error: Content is protected !!