வளைகுடா செய்திகள்

வீட்டின் பால்கனிகளில் துணிகளை தொங்கவிட்டால் ஆறு மாதம் சிறை.. 5,000 ரியால் வரை அபராதம்..!! ஓமானில் வெளியான அறிக்கை…!!

ஓமனின் தலைநகரான மஸ்கட்டில் வசிக்கும் குடியிருப்பாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றினை முனிசிபாலிட்டி வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, குடியிருப்பாளர்கள் துணிகளை உலர்த்துவதற்கு தங்களது வீடுகளில் உள்ள பால்கனியிலோ அல்லது வீடுகளின் வெளிப்புறத்தில் தெரியும்படியோ துணிகளை தொங்கவிட்டால், அவர்களுக்கு 50 ஓமான் ரியால் முதல் 5,000 ரியால் வரை அபராதம் அல்லது 24 மணிநேரம் முதல் ஆறு மாதங்கள் வரை  சிறைத்தண்டனையும் விதிக்கப்படும் என்பது தெரிய வந்துள்ளது.

மஸ்கட் முனிசிபாலிட்டி ஆன்லைனில் வெளியிட்ட அறிக்கையில், மஸ்கட்டின் அழகியல் நகர்ப்புற அமைப்பை பராமரிக்கும் முனிசிபாலிட்டி முயற்சியின் ஒரு பகுதியாக​​கட்டிடங்களின் பால்கனிகளில் துணிகளை உலர்த்துவதற்கு சில நிபந்தனைகளை கடைபிடிக்க முனிசிபாலிட்டியானது கவர்னரேட்டில் கட்டிடங்களை அமைப்பதற்கான பிரிவு (32) உள்ளூர் ஆணை எண். 92/23 விதியினை நகராட்சி வலியுறுத்தியுள்ளது.

தெருக்களில் உள்ள குடியிருப்பு கட்டிடங்களின் பால்கனிகளில் துணிகளை உலர்த்துவதற்கும் சில நிபந்தனைகள் பின்வருமாறு கடைபிடிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முனிசிபாலிட்டி சட்டங்கள் பால்கனிகளில் துணிகளைத் தொங்க விடுவதற்கு அனுமதிப்பதில்லை என்ற நிலையில், பால்கனியில் உள்ள ஆடைகள் பின்வரும் பொருட்களில் ஒன்றால் மூடப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது:

  • மஷராபியா (Masharabiya) அல்லது மர கண்ணி (wooden mesh) என்று அழைக்கப்படும் மரத்தினாலோ அல்லது கண்ணாடி போன்றவற்றினாலோ மூடப்பட்ட பால்கனியில் துணிகளை உலர்த்திக் கொள்ளலாம்.
  • 3 க்கும் மேற்பட்ட எந்தவொரு அடுக்கு மாடிக் குடியிருப்புகளிலும் உள்ள ஒவ்வொரு குடியிருப்பு யூனிட்டுக்கும் ஆடைகளை உலர்த்துவதற்கு ஒரு பால்கனியை வழங்க வேண்டும், கட்டிடத்தின் அமைப்பைப் பொறுத்து, மூடப்படும் பொருட்கள் கொண்டு மூட வேண்டும்.
  • அதேசமயம், கட்டிடங்களில் (பால்கனிகள் அல்லது ஜன்னல்கள்) திறப்புகளுக்கு ஒரு கம்பி வலையை பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!