வளைகுடா செய்திகள்

சவூதியில் திடீரென சுழன்று அடித்த சூறாவளி..!! மரங்கள் வேரோடு சாய்வு.. வாகனங்கள் சேதம்.. வைரலான வீடியோ..!!

சவூதி அரேபியாவில் கடந்த ஒரு சில நாட்களாக நிலையற்ற வானிலை நிலவி வருகின்றது. இதனை முன்னிட்டு சவூதி அரேபியாவின் பல்வேறு பகுதிகளிலும் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த மோசமான வானிலையின் போது சவூதி அரேபியாவின் மக்கா மாகாணத்தில் உள்ள தைஃப் நகரில் பயங்கர சூறாவளி சுழற்றியடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த கோரமான வானிலையானது நாட்டை மோசமாக தாக்கியுள்ளதாக தவல்கள் வெளியாகியுள்ளன.

சுழன்று அடித்த சூறாவளிக் காற்றில் பல்வேறு குப்பைகளும் தூசிகளும் நிறைந்திருந்ததாகக் கூறப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் வசித்த குடியிருப்பாளர்கள் இதுவரை இது போன்ற சுழலும் குப்பைகளை பார்த்ததில்லை என்று தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி, அந்தப் பகுதியில் சூறாவளி ஏற்படுத்திய தாக்கத்தைப் பார்த்து குடியிருப்பாளர்கள் அதிர்ச்சியயடைந்துள்ளனர்.

அதிபயங்கர சூறாவளி விட்டுச் சென்ற அழிவை சமூக ஊடகங்களில் வெளியான வீடியோ கிளிப்புகளில் காணலாம். கடுமையாக சுழன்று அடித்த காற்றினால் மரங்கள் வேரோடு சாய்ந்த நிலையிலும், வாகனங்கள் சேதமடைந்த நிலையிலும் இருப்பது வீடியோவில் வெளியாகியுள்ளன.

இது குறித்து சவுதி அரேபியாவின் தேசிய வானிலை ஆய்வு மையம் (National Centre of Meteorology – NCM) வெளியிட்டுள்ள ஒரு ஆலோசனையில், தைஃப் நகரில் வீசிய அதிபயங்கர சூறாவளிக்காற்று தற்காலிகமானது என்று உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், இந்த சூறாவளிக் காற்றின் விளைவாக, அடிக்கடி கடுமையான இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும், இது குறிப்பிட்ட காலத்திற்கு நிகழ்கிறது என்றும் விளக்கமளித்துள்ளது. இதுபோலவே, கடந்த ஆண்டுகளிலும் வானிலை நிகழ்வுகளை மையம் கண்காணித்துள்ளது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை முதல் வியாழன் வரை 50 கிமீ வேகத்தில் மணல் புயல்கள், ஆலங்கட்டி மழை மற்றும் சாரல் மழை பெய்யும் என்று வானிலை மையம் முன்னறிவிப்பு ஒன்றை வெளியிட்டு எச்சரித்துள்ளது. அத்துடன் எதிர்வரும் நாட்களில் சவூதியின் பெரும்பாலான பிராந்தியங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

NCM வானிலை முன்னறிவிப்பின் படி, ஆசிர், அல்-பஹா, ஹைல், அல்-காசிம், நஜ்ரான் மற்றும் ஜசான் மாகாணங்களின் பெரும்பாலான கவர்னரேட்கள் மற்றும் மக்கா, ரியாத் மற்றும் கிழக்கு மாகாணத்தின் சில பகுதிகளில் மிதமான மற்றும் பலத்த இடியுடன் கூடிய மழை பெய்யும் என்பது தெரிய வந்துள்ளது.

அத்துடன், இந்த சூறாவளி குடியிருப்பாளர்களுக்கு அதிக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும், எந்த நேரத்திலும் NCM-ஐ அழைக்கவும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!