அமீரக செய்திகள்

ரமலான்-2023: வாகனங்களுக்கான கட்டண பார்க்கிங் நேரங்களில் மாற்றம்.. அறிவிப்பை வெளியிட்டுள்ள ஷார்ஜா..!!

ஷார்ஜா முனிசிபாலிட்டியானது ஷார்ஜா எமிரேட்டில் ரமலான் மாதத்திற்கான கட்டண வாகன பார்க்கிங்கிற்கான நேரத்தை அறிவித்துள்ளது. அதன் படி, கட்டண பார்க்கிங் நேரம் சனிக்கிழமை முதல் வியாழன் வரை காலை 8 மணி முதல் நள்ளிரவு வரை இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் நீல குறியீடு அடையாளங்களைக் (blue information signs) கொண்ட மண்டலங்களைத் (zones) தவிர, மற்ற அனைத்து இடங்களிலும் வெள்ளிக்கிழமைகளில் பார்க்கிங் இலவசம் என கூறப்பட்டுள்ளது. இந்த குறிப்பிட்ட பகுதிகளில், வாகன நிறுத்தம் என்பது வாரத்தின் அனைத்து நாட்களிலும் கட்டண சேவையாகும்.

அத்துடன் ஷார்ஜா நகர பூங்காக்கள் திறக்கும் நேரத்தையும் நகராட்சி அறிவித்துள்ளது. அதன்படி வாரத்தின் அனைத்து நாட்களிலும் மாலை 4 மணி முதல் நள்ளிரவு வரை பூங்காக்கள் திறந்திருக்கும் என கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது ஷார்ஜா எமிரேட்டில் மருத்துவ மையங்கள் செயல்படும் நேரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

முன்னதாக, ஷார்ஜா எமிரேட்டின் அரசாங்க நிறுவனங்களில் ஊழியர்களுக்கான அதிகாரப்பூர்வ ரமலான் வேலை நேரத்தையும் அரசு அறிவித்துள்ளது. ஷார்ஜாவில் பணிபுரியும் ஊழியர்களுக்கான ரமலான் அட்டவணை பெரும்பாலும் அமீரகத்தின் அரசாங்க மனித வளங்களுக்கான ஃபெடரல் ஆணையத்தால் (FAHR) வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களைப் பின்பற்றி கடைபிடிக்கப்படுகிறது.

அதன்படி ரமலான் மாதத்தில் திங்கள் முதல் வியாழன் வரை காலை 9 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரையிலும், வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும் அரசு ஊழியர்களுக்கு உத்தியோகபூர்வ வேலை நேரம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தனியார் துறையைப் பொறுத்தவரை, ஐக்கிய அரபு அமீரகத்தின் மனித வளங்கள் மற்றும் எமிரேடிசேஷன் அமைச்சகம் (MoHRE) ரமலான் மாதத்தில் வேலை நேரம் சாதாரண நாளின் வேலை நேரங்களை விட இரண்டு மணிநேரம் குறைக்கப்படும் என்று சமீபத்தில் அறிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!