அமீரக செய்திகள்

UAE: அனைத்து வணிகங்களும் முன் அனுமதியின்றி 24 மணி நேரமும் செயல்பட அனுமதி.. ரமலானை முன்னிட்டு அறிவிப்பை வெளியிட்ட மற்றொரு எமிரேட்..!!

புனித ரமலான் மாதம் முழுவதும் ராஸ் அல் கைமாவில் உள்ள அனைத்து வணிகங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் எவ்வித அனுமதியுமின்றி நாள் முழுவதும் 24 மணிநேரமும் செயல்பட அனுமதி அளிக்கப்படுவதாக பொருளாதார மேம்பாட்டுத் துறை இன்று வெள்ளிக்கிழமை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ராஸ் அல் கைமாவில் வணிக செயல்பாடுகளை நீட்டிப்பது தொடர்பாக பொருளாதார மேம்பாட்டுத் துறை நடத்திய ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு, இந்த ரமலான் மாதத்தில் கடைகள் மற்றும் வணிகங்களின் நீட்டிக்கப்பட்ட செயல்பாடுகளுக்கு இனி அனுமதி தேவையில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஏழு எமிரேட்களில் ஒன்றான ராஸ் அல் கைமா எமிரேட்டை ஒரு சிறந்த வணிக இடமாக மாற்றுவதற்கு, ராஸ் அல் கைமா அரசு எடுத்துவரும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகவும் பொருளாதார அமைச்சகம் கூறியுள்ளது.

அதேபோன்று மற்றொரு எமிரேட்டான ஷார்ஜாவிலும், ரமலான் மாதம் முழுவதும் உணவகங்கள், பேக்கரிகள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகள் நள்ளிரவுக்கு மேல் தங்களின் வேலை நேரத்தை முன் அனுமதியின்றி நீட்டித்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனை தவிர்த்து மற்ற வணிக செயல்பாடுகள் வேலை நேரத்தை நீட்டித்து கொள்ள சிறப்பு அனுமதிகளைப் பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!