அமீரக செய்திகள்

UAE ரமலான்: ஷார்ஜாவில் விதிமீறல்களை கண்டறிய தினசரி ஆய்வு… அதிகாரி தகவல்..!!

ஷார்ஜாவில் உள்ள அதிகாரிகள் ரமலான் மாதத்தின் முதல் நாளில் இருந்தே இந்த மாதத்தில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை மீறுபவர்களைக் கண்டறிய அவ்வப்போது ஆய்வுகளை தொடங்குவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, எமிரேட்டில் பல பிரச்சாரங்கள் மற்றும் தினசரி ஆய்வுகளை மேற்கொள்ளப்படும் என்று ஷார்ஜா நகர முனிசிபாலிட்டியின் டைரக்டர் ஜெனரல் ஓபைத் சயீத் அல் துனைஜி அவர்கள் தெரிவித்துள்ளார்.

ரமலான் மாதத்தை முன்னிட்டு எமிரேட்டில் நிகழும் பல அத்துமீறல் நடவடிக்கைகளை ஒடுக்க 24 மணி நேரமும் பணிபுரியும் குழுக்களை ஆணையம் உருவாக்கியுள்ளது என்றும் அத்துடன் பொதுமக்களுக்கு தொடர்ந்து சேவைகளை வழங்க அதன் சேவை மையங்களுக்கு வேலை நேரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அல் துனைஜி கூறியுள்ளார். இந்த சேவைகளில் கால்நடை மருத்துவமனைகள், சுகாதார சேவைகள் மற்றும் கட்டிடக் கட்டுப்பாட்டு சேவைகள் போன்றவை அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷார்ஜாவில் அதிகாரிகள் மேற்கொள்ளும் ஆய்வுகள்

F&B (Food & Beverage) சேவைகள்

இந்த ஆய்வுகள் உணவு விற்பனை நிலையங்கள், உணவு சேமிப்பு, பேக்கரிகள், பொது சமையலறைகள், ரோஸ்டரிகள், இனிப்பு கடைகள் மற்றும் பிற உணவு நிறுவனங்களை குறிவைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

அத்துடன் பிரச்சாரங்களைச் செயல்படுத்துவதற்கும், நுகர்வோருக்கு வழங்கப்படும் உணவு பாதுகாப்பானது என்றும், அதிகாரிகளால் அங்கீகரிக்கப்பட்ட சுகாதாரத் தரநிலைகள் மற்றும் நிபந்தனைகளைப் பின்பற்றுவதை உறுதி செய்வதற்கும் சுமார் 40 ஆய்வாளர்கள் கொண்ட குழு உருவாக்கப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.

தேவையற்ற தொந்தரவுகள்:

பொதுக் மக்களுக்கு ஏதேனும் இடையூறுகள் ஏற்பட்டால் அவற்றைக் கண்காணிக்க வருகை மற்றும் ஆய்வுப் பிரச்சாரங்கள் இருக்கும் என்று முனிசிபாலிட்டி தெரிவித்துள்ளது. அதிக சத்தத்தை எழுப்புவது, மற்றவர்களுக்கு தொந்தரவு கொடுப்பது மற்றும் வீடுகளுக்கு வெளியே சிறப்பு ரமலான் கூடாரங்களை அமைப்பது ஆகியவை இதில் அடங்கும் என கூறப்பட்டுள்ளது.

இவை மட்டுமின்றி, தூய்மையைப் பராமரித்தல் மற்றும் குறைவான சத்தத்தை கடைபிடித்தல் போன்ற விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளைக் கடைப்பிடிப்பதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஆணையம் பிரச்சாரத்தின் மூலம் பரப்பும் என்றும் அல் துனைஜி தெரிவித்துள்ளார்.

வணிக அனுமதிகள்:

ரமலான் காலத்தில் நள்ளிரவுக்கு மேல் வேலை செய்ய விரும்பும் வணிக நிறுவனங்கள் முறையான அனுமதியை கட்டுப்பாடு மற்றும் ஆய்வுத் துறையிடம் பெற்றுள்ளதா என்பதை ஆய்வுக் குழுக்கள் உறுதி செய்யும் என்று கூறப்பட்டுள்ளது. அதேவேளை, ஒப்பந்த நிறுவனங்கள் மற்றும் பொறியியல் ஆலோசனை அலுவலகங்கள் (Contracting companies and engineering consultancy offices) வழக்கமான இரவு 10 மணிக்கு பதிலாக நள்ளிரவு 12 மணி வரை வேலை செய்ய அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டண பார்க்கிங்:

ரமலான் மாதத்தில் காலை 8 மணி முதல் நள்ளிரவு வரை பார்க்கிங் கட்டணம் கணக்கிடப்படும் என்று அல் துனைஜி விளக்கியுள்ளார். குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாவாசிகள் பார்க்கிங்கிற்கு கட்டணம் செலுத்தியிருப்பதை ஆய்வுக் குழுக்கள் உறுதி செய்யும் என்று அவர் கூறியுள்ளார். அதுபோல, மசூதிகளைச் சுற்றியுள்ள பார்க்கிங் இடங்கள் வழிபாட்டாளர்களுக்கான பிரார்த்தனைக்கான அழைப்பை எழுப்புவதில் இருந்து ஒரு மணி நேரம் இலவசம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பூங்காக்கள் செயல்படும் நேரம்:

பொது மற்றும் குடியிருப்பு பூங்காக்கள் மாலை 4 மணி முதல் நள்ளிரவு வரை பார்வையாளர்களுக்காக திறந்திருக்கும் என்பதால், பார்வையாளர்கள் அங்கு நேரத்தை செலவிடும்போது வழிகாட்டுதல்களை கடைபிடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

எதிர்மறை நடத்தை:

குடியிருப்பாளர்கள் தங்கள் கண்காணிப்புகள், புகார்கள் மற்றும் விசாரணைகளைப் பதிவுசெய்யும் கால் சென்டரை அடைய ‘993’ என்ற எண்ணுக்கு அழைக்கலாம். மேற்பட்ட நடவடிக்கைக்காக ஒவ்வொரு அழைப்பையும் உடனடியாக சம்பந்தப்பட்ட துறைக்கு மாற்றப்படும். ஏதேனும் அசம்பாவிதம் அல்லது எதிர்மறையான நடத்தையைக் கண்டால், கொடுக்கப்பட்ட எண்ணை அழைக்குமாறு பொதுமக்களை அல் துனைஜி வலியுறுத்தியுள்ளார்.

Related Articles

Back to top button
error: Content is protected !!