அமீரக செய்திகள்

ஈத் அல் ஃபித்ரை முன்னிட்டு இலவச பார்க்கிங்கை அறிவித்த துபாய்.. RTA வெளியிட்டுள்ள அறிவிப்பு..!!

அமீரகத்தில் வரவிருக்கும் ஈத் அல் ஃபித்ர் பண்டிகையை முன்னிட்டு அறிவிக்கப்பட்டுள்ள விடுமுறையின் போது துபாயில் பொது பார்க்கிங் இலவசமாக கிடைக்கும் என்று சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) அறிவித்துள்ளது. ஆனால், இது மல்டி லெவல் பார்க்கிங் பகுதிகளுக்கு பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.

பிறை பார்ப்பதைப் பொறுத்து, குடியிருப்பாளர்களுக்கு நான்கு அல்லது ஐந்து நாள் விடுமுறை அளிக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ள நிலையில், வாகன ஓட்டிகள் இந்த நாட்களில் இலவச பார்க்கிங் வசதியை அணுகலாம் என கூறப்பட்டுள்ளது.

RTA வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, இலவச பார்க்கிங் ஏப்ரல் 20 முதல் செயல்படுத்தப்படும் என தெரிவிப்பபமட்டுள்ளது. அத்துடன் இது ஷவ்வால் 3 வரை நீடிக்கும் என்றும் மீண்டும் ஷவ்வால் 4 முதல் பொது பார்க்கிங் பகுதிகளுக்கு கட்டணம் பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் பிறையைப் பார்க்கும் குழு ஏப்ரல் 20 ஆம் தேதி அன்று கூடி, ஈத் அல் ஃபித்ர் வெள்ளிக்கிழமையா என்பதைத் தீர்மானிக்கும். அப்போது பிறைத் தென்படாமல் இருந்தால் ஏப்ரல் 22 சனிக்கிழமை ஈத் அல் ஃபித்ரின் முதல் நாளாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

அதன்படி, வெள்ளிக்கிழமை ஈத் அல் ஃபித்ர் என்றால், வியாழன் முதல் ஞாயிறு வரை பார்க்கிங் இலவசம் அல்லது சனிக்கிழமை ஈத் அல் ஃபித்ராக இருந்தால், வியாழன் முதல் திங்கள் வரை இலவச பார்க்கிங் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!