அமீரக செய்திகள்

நட்சத்திரங்களைப் போல ஜொலிக்கும் துபாய்!! – அமீரக விண்வெளி வீரர் வெளியிட்ட வியப்பூட்டும் புகைப்படம்..!!

ஐக்கிய அரபு அமீரக விண்வெளி வீரர் சுல்தான் அல்நெயாதி கடந்த புதன்கிழமையன்று (மே.3) சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து (ISS) எடுக்கப்பட்ட துபாயின் மற்றுமொரு வியப்பூட்டும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அவர் பகிர்ந்த அந்த புகைப்படத்தில், துபாயின் அடையாள சின்னங்களில் ஒன்றான பாம் ஜுமைராவின் அழகு தெளிவாக பிரகாசிக்கிறது.

சமீபத்தில் விண்வெளிக்கு சென்று அங்கே விண்வெளி நடையை நிகழ்த்திய முதல் அரபு நாட்டவர் எனும் சாதனை படைத்தவரும், அமீரகத்தை சேர்ந்த விண்வெளி வீரருமான சுல்தான் அல்நெயாதி, பூமியில் இருந்து 400 கிமீ உயரத்தில் இருந்து எடுக்கப்பட்ட துபாய் கடற்கரையின் இரவு காட்சியை பகிர்ந்துள்ளார்.

இந்த அற்புதமான புகைப்படம், எமிரேட்டின் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த புகைப்படம் குறித்து அவர் “பூமியிலும் அதற்கு அப்பாலும் தேசத்தின் அசாதாரண சாதனைகளின் படத்தை நம் விண்வெளி வீரர் வண்ணம் தீட்டுகிறார்” என்று கூறியுள்ளார்.

இரவு நேரத்தில் தங்க நிற ஒளியில் ஜொலிக்கும் காட்சியை காட்டும் அந்த புகைப்படம் காண்போரின் கண்களைக் கட்டியிழுக்கும் என்பதில் சந்தேகமில்லை. மேலும், அட்லாண்டிஸ், தி பாம், ஃபைவ் பாம் ஜூமைரா ஹோட்டல், ஜுமைரா ஜபீல் சாரே மற்றும் சமீபத்தில் திறக்கப்பட்ட அட்லாண்டிஸ் தி ராயல் உள்ளிட்ட துபாய் எமிரேட்டின் சில சிறந்த ஆடம்பர ரிசார்ட்டுகள் அவர் எடுத்த புகைப்படத்தில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!