அமீரக செய்திகள்
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக துபாய் மெட்ரோ ரெட்லைனில் சேவை இடையூறு… பயணிகளுக்கு RTA வெளியிட்டுள்ள தகவல்…

துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) இன்று (புதன்கிழமை) துபாய் மெட்ரோவின் ரெட் லைனில் உள்ள ஒரு மெட்ரோ நிலையமான GGICO மெட்ரோ நிலையத்தில் தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதனையடுத்து இந்த கோளாறின் காரணமாக ஏற்பட்டுள்ள சேவை இடையூறு குறித்து பயணிகளுக்கு தெரிவிக்கும் வகையில் RTA பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இது குறித்து RTA அதன் ட்விட்டர் பக்கத்தில், ரெட்லைனில் உள்ள மெட்ரோ நிலையத்தில் தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டுள்ளதாக ட்வீட் செய்துள்ளது.
இதனையடுத்து, சென்டர்பாயின்ட் மற்றும் எக்ஸ்போ2020 மெட்ரோ நிலையங்களுக்கு செல்லும் பயணிகளை ஏற்றிச் செல்ல பொதுப் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளதாக RTA தெரிவித்துள்ளது.