அமீரக செய்திகள்

மே.15 முதல் துபாய் பயணிகளுக்கு இனி ‘மொபைல் போர்டிங் பாஸ்’ மட்டும்தான்… காகிதப் பயண்பாட்டை குறைக்க எமிரேட்ஸ் எடுத்துள்ள முடிவு!!

துபாயின் மிகப்பெரிய விமான நிறுவனமான எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ், காகிதப் பயண்பாட்டை குறைக்கும் விதமாக நாளை மே.15 திங்கள்கிழமை முதல், துபாயிலிருந்து புறப்படும் பெரும்பாலான பயணிகள் காகிதத்தில் அச்சிடப்படும் போர்டிங் பாஸுக்குப் பதிலாக மொபைல் போர்டிங் பாஸைப் பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

பொதுவாக ஆன்லைனில் செக்-இன் செய்யும் பயணிகள் தங்கள் போர்டிங் பாஸை ஆப்பிள் வாலட் அல்லது கூகுள் வாலட்டில் பதிவிறக்கலாம் அல்லது எமிரேட்ஸ் ஆப்ஸில் போர்டிங் பாஸைப் பெற முடியும். அதேசமயம், டெர்மினல் 3 இல் செக்-இன் செய்யும் பயணிகள் மின்னஞ்சல் அல்லது SMS மூலம் தங்கள் மொபைல் போர்டிங் பாஸினை பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான நிறுவனத்தின் இந்த புது முயற்சி காகிதக் கழிவுகளைக் கணிசமாகக் குறைப்பதுடன் துபாயிலிருந்து புறப்படும் பயணிகளுக்கு வசதியான மற்றும் விரைவான டிஜிட்டல் சோதனை அனுபவத்தை வழங்கும். மேலும், இது போர்டிங் பாஸ்களை தொலைப்பது அல்லது தவறாகப் பயன்படுத்துவது போன்ற அபாயத்தைக் குறைக்கும். ஆகவே, துபாயில் டூட்டி ஃப்ரீ, செக்யூரிட்டி மற்றும் போர்டிங் ஆகிய இடங்களில் மொபைலில் போர்டிங் பாஸைக் காண்பிப்பதன் மூலம் பயணம் முழுவதும் மொபைல் போர்டிங் பாஸைப் பயன்படுத்தலாம்.

பயணிகள் விமான நிலையம் மற்றும் விமானத்திற்குள் செல்லும் போது, எமிரேட்ஸ் முகவர்களும் விமான நிலைய ஊழியர்களும் மொபைல் போர்டிங் பாஸில் உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்வார்கள். கூடுமான வரையில் காகிதப் பயன்பாட்டைத் தவிர்க்கும் எமிரேட்ஸ் நிறுவனத்தின் முயற்சியின் ஒரு பகுதியாக, பயணிகளின் செக்-இன் பேக்கேஜ் ரசீதும் மின்னஞ்சல் அல்லது எமிரேட்ஸ் செயலியில் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

இருப்பினும், கைக்குழந்தைகள், துணையில்லாத சிறார்களுடன் பயணம் செய்யும் போது, சிறப்பு உதவி தேவைப்படும் பயணிகள், பிற விமான நிறுவனங்களில் இருந்து வரும் விமானங்களில் உள்ள பயணிகள் மற்றும் அமெரிக்காவிற்கு செல்லும் அனைத்து பயணிகளும் அசல் போர்டிங் பாஸை வழங்க வேண்டியிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த சமயத்தில், பயணிகளிடம் மொபைல் போன் இல்லை, எதிர்பாராதவிதமாக பேட்டரியில் சார்ஜ் இல்லை அல்லது சிஸ்டம் செயலிழப்பு அல்லது தடுமாற்றம், செய்தி வழங்குவதில் தாமதம் அல்லது வைஃபை, நெட்வொர்க் அல்லது டேட்டா பேக்கேஜை அணுக இயலாமை போன்ற காரணங்களால் பயணிகள் தங்கள் மொபைலில் உள்ள தகவல்களை அணுக முடியவில்லை என்ற நிலையில், எமிரேட்ஸ் முகவர்களிடம் கோரிக்கையின் பேரில் போர்டிங் பாஸை அச்சிடுவதற்கான வாய்ப்பையும் பயணிகள் பெறலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

 

Related Articles

Back to top button
error: Content is protected !!