அமீரக செய்திகள்

துபாய், அபுதாபி, ஷார்ஜா மற்றும் அஜ்மான் ஆகிய எமிரேட்களில் பொது பார்க்கிங் அபராதத்தை ஆன்லைனில் செலுத்துவது எப்படி..?? – விரிவான வழிமுறைகள் இதோ…!!

அபுதாபி, துபாய், ஷார்ஜா மற்றும் அஜ்மான் ஆகிய நான்கு எமிரேட்களில் கட்டண பார்க்கிங் மண்டலங்கள் உள்ளன. இந்த பகுதிகளில் வாகனங்களை நிறுத்தி பார்க்கிங் கட்டணம் செலுத்தாமல் இருந்தாலோ அல்லது பார்க்கிங்கிற்கு என நியமிக்கப்படாத இடங்களில் உங்கள் காரை பார்க்கிங் செய்தாலோ உங்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

இவ்வாறு உங்கள் மொபைல் எண்ணுக்கு SMS அல்லது உங்கள் காருக்கு பார்க்கிங் டிக்கெட் கிடைத்துள்ளதா..?? இது போன்று உங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள பார்க்கிங் அபராதங்களை ஐக்கிய அரபு அமீரகத்தில் சில நிமிடங்களில் எளிதாகவும் விரைவாகவும் ஆன்லைனில் செலுத்தும் வசதி உள்ளது. எமிரேட்டுகளில் அந்தந்த முனிசிபாலிட்டி மற்றும் பொதுப் போக்குவரத்துத் துறைகள் மூலம் உங்கள் அபராதங்களை நீங்கள் செலுத்தலாம். அது குறித்த விபரங்களை கீழே காணலாம்.

1. அபுதாபி:

அபுதாபியில், பொது பார்க்கிங் பகுதிக்காக அபராதத் தொகை விதிக்கப்பட்ட நாளில் இருந்து 60 நாட்களுக்குள் அபராதத்தை செலுத்தினால், எமிரேட்டின் பொதுப் போக்குவரத்து ஆணையமான – ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் (ITC) படி, 25 சதவீத தள்ளுபடியைப் பெறலாம். பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம், அபுதாபியின் டோல் கேட் அமைப்பு மற்றும் பொது பார்க்கிங்கிற்கான அதிகாரப்பூர்வ பயன்பாடான ‘Darb’ செயலி மூலம் பொது வாகன நிறுத்துமிடத்திற்கான அபராதங்களை நீங்கள் செலுத்தலாம்:

  1. அதற்கு முதலில் உங்கள் மொபைலில் Apple App Store அல்லது Google Play Store இலிருந்து Darb பயன்பாட்டை டவுன்லோட் செய்து, உங்களின் UAE PASS மூலம் உள்நுழையவும்.
  2. அடுத்து, ஆப் மெனுவில் உள்ள ‘Fines’ என்பதைத் தேர்ந்தெடுத்தால், வாகனத்துடன் இணைக்கப்பட்ட அபராதம் மற்றும் உங்கள் எமிரேட்ஸ் ஐடியைக் கண்டறியும்.
  3. பின்னர், உங்கள் கணக்கில் அபராதம் இருந்தால், விதிமீறலைத் தேர்ந்தெடுத்து, அப்ளிகேஷனில் உங்கள் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்துங்கள்.

2. துபாய்:

துபாயில் உங்கள் பார்க்கிங் அபராதங்களை துபாய் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் (RTA) இணையதளம் – rta.ae மூலம் செலுத்தலாம். மேலும், இந்த ஆன்லைன் சேவை வழியாக, உங்கள் சாலிக் கணக்கில் இருப்பு இல்லாமல் கேட்களைக் கடப்பது போன்ற பிற மீறல்களுக்கும் நீங்கள் பணம் செலுத்தலாம். நீங்கள் அபராதங்களைச் சரிபார்த்து அவற்றை எவ்வாறு செலுத்தலாம் என்பது பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது:

>>https://traffic.rta.ae/trfesrv/public_resources/revamp/ffu/public-fines-payment.do?serviceCode=301 என்ற லிங்க் மூலம் உள்நுழைந்து பின்வரும் முறைகளில் ஏதேனும் ஒன்றின் மூலம் உங்களுக்கு எதிராக விதிக்கப்பட்ட அபராதங்களைச் சரிபார்த்துக் கொள்ளலாம்:

  • உங்கள் வாகனத்தின் நம்பர் பிளேட்டைப் பயன்படுத்துதல்
  • உங்கள் லைசன்ஸ் நம்பரைப் பயன்படுத்துதல்.
  • உங்கள் அபராத எண்ணைப் பயன்படுத்துதல்.
  • உங்கள் ட்ராஃபிக் கோப்பு எண்ணைப் (traffic file number) பயன்படுத்துதல்

>> நீங்கள் விவரங்களை உள்ளிட்டவுடன், உங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதம் குறித்த தகவலை கணினி வழங்கும்.

>> கடைசியாக, உங்கள் கிரெடிட் அல்லது டெபிட் கார்டைப் பயன்படுத்தி நீங்கள் அபராதத்தை செலுத்தலாம். அதுபோல, Apple, Huawei, Android ஆகிய இரண்டு சாதனங்களுக்கும் கிடைக்கும் ‘RTA’ செயலியைப் பயன்படுத்தி அபராதத்தையும் செலுத்தலாம்.

3. ஷார்ஜா:

ஷார்ஜா முனிசிபாலிட்டியின் இணையதளம் வழியாக பின்வரும் படிகளைப் பின்பற்றி அபராதத்தை செலுத்தலாம்:

  1. முதலில் https://www.shjmun.gov.ae/PublicEServices/Serv4-payfines/default.aspx?Lang=en-US இந்த லிங்க்கை கிளிக் செய்து உள்நுழைந்து உங்கள் கார் நம்பர் பிளேட், எமிரேட் மற்றும் கார் தனியார் அல்லது வாடகை போன்ற தகவலை உள்ளிடவும்.
  2. பின்னர், ‘search’ பொத்தானைக் கிளிக் செய்யவும். ஷார்ஜா முனிசிபாலிட்டி தரவுத்தளத்தில் ஏதேனும் அபராதம் நிலுவையில் இருந்தால், தொகை மற்றும் மீறல் காண்பிக்கப்படும்.
  3. அதனையடுத்து, உங்கள் மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண் போன்ற உங்கள் தொடர்பு விவரங்களை உள்ளிட்டு, ஷார்ஜா முனிசிபாலிட்டி இணையதளம் மூலம் பார்க்கிங் விதிமீறலுக்கான தொகையை ஆன்லைனில் செலுத்தவும்.
  4. இறுதியாக, நீங்கள் அபராதத்தைச் செலுத்தியதற்கான உறுதிப்படுத்தல் SMS மற்றும் மின்னஞ்சலைப் பெறுவீர்கள். அதுமட்டுமின்றி, ஷார்ஜா முனிசிபாலிட்டியின் வாடிக்கையாளர் மகிழ்ச்சி மையத்திற்குச் சென்றும் உங்களது அபராதத்தை செலுத்தலாம்.

4. அஜ்மான்

அஜ்மான் முனிசிபாலிட்டி மற்றும் திட்டமிடல் துறையின் மொபைல் அப்ளிகேஷன் ‘MPDA’ வழியாக, உங்களது அபராதத்தை செலுத்தலாம். நீங்கள் பின்பற்ற வேண்டிய படிகள்:

  1. உங்கள் மொபைலில் Apple App Store அல்லது Google Play Store இலிருந்து ‘MPDA’ ஆப்பை டவுன்லோட் செய்து,  பயன்பாட்டின் முகப்புப்பக்கத்தில் உள்ள ‘Pay fines’ என்பதைத் தட்டி, ‘Go to’ என்பதைக் கிளிக் செய்யவும்.
  2. பின்னர், ‘Personal’ என்பதைத் தேர்ந்தெடுத்து, பின்வரும் விருப்பங்களில் ஒன்றைத் தேர்வு செய்யவும் – ‘Local/Resident’ or Visitor.
  3. நீங்கள் ‘Local/Resident’ என்பதைத் தேர்ந்தெடுத்தால் உங்கள் எமிரேட்ஸ் ஐடி எண்ணை உள்ளிடவும். நீங்கள் ‘Visitor’ என்பதைத் தேர்ந்தெடுத்தால், உங்கள் பாஸ்போர்ட் எண் மற்றும் தேசியத்தை உள்ளிடவும்.
  4. ‘Search’  என்பதைத் தட்டியதும் உங்கள் கணக்கின் கீழ் உள்ள கணினியில் அபராதங்களை நீங்கள் காண முடியும்.
  5. மீறலைத் தேர்ந்தெடுத்து, உங்கள் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலம் பயன்பாட்டில் அபராதம் செலுத்தவும்.
  6. அது முடிந்ததும், அப்ளிகேஷனில் இருந்து பணம் செலுத்துதலுக்கான உறுதிப்படுத்தல் அறிவிப்பைப் பெறுவீர்கள்.

Related Articles

Back to top button
error: Content is protected !!