அமீரக செய்திகள்

துபாயில் 2 மாதங்களாக சம்பளம் தராமல் இழுத்தடித்த நிறுவனத்துக்கு ஒரு மில்லியன் திர்ஹம்ஸ் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவு!!

துபாயைத் தளமாகக் கொண்ட கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் இரண்டு மாதங்களாக தனது நிறுவனத்தில் பணிபுரியும் 215 தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கத் தவறிய குற்றத்திற்காக அவருக்கு 1.075 மில்லியன் திர்ஹம்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அமீரகத்தின் பொது வழக்கு துறை (public prosecution) இன்று ஜூன் 24, சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

மேலும், துபாய் நேச்சுரலைசேஷன் மற்றும் ரெசிடென்சி ப்ராசிகியூஷன் ஆனது, தொழிலாளர்களின் ஊதியத்தை வழங்காதது தொடர்பாக நிறுவனத்தின் உரிமையாளர் மீது குற்றம் சாட்டி, அந்த நிறுவனத்தின் இயக்குனரை நீதிமன்ற வழக்கிற்கு பரிந்துரைத்துள்ளது.

வழக்கின் முடிவில், நிறுவனத்தில் ஏற்பட்ட பொருளாதாரச் சிக்கல்கள் காரணமாக ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியவில்லை என்று குற்றம் சாட்டப்பட்ட அந்த நிறுவனத்தின் உரிமையாளர் ஒப்புக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஒவ்வொரு தொழிலாளிக்கும் 5,000 திர்ஹம் வீதம் நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்று நிறுவன உரிமையாளருக்கு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, 215 தொழிலாளர்களுக்கு தலா 5000 வீதம், 1.075 மில்லியன் திர்ஹம்ஸ் சம்பள பாக்கியை அபராதமாக அந்த நிறுவனம் உடனடியாக செலுத்த வேண்டும் என்று பொது வழக்கு துறை உத்தரவிட்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!