அமீரக செய்திகள்

எக்ஸ்போ 2020: ஒரு நாள் டிக்கெட் விலையில் ஒரு மாத பாஸ் பெறலாம்..!! சிறப்பு சலுகை அறிவிப்பு..!!

எக்ஸ்போ 2020 துவங்க ஒரு வாரமே உள்ள நிலையில் பார்வையாளர்களுக்கு ஒரு சிறப்பு சலுகை தற்பொழுது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கும் சலுகையின் மூலம் எக்ஸ்போவிற்கு செல்லவிருப்பவர்கள் ஒரு நாள் டிக்கெட்டின் விலைக்கு இப்போது ஒரு மாத பாஸ் பெறலாம்.

இதன்படி 95 திர்ஹம் விலையில் டிக்கெட் வாங்கும் பார்வையாளர்களுக்கு 31 நாட்களுக்கு எக்ஸ்போ தளத்திற்கு செல்ல அணுகல் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அக்டோபர் பாஸ் பெற சலுகையானது அக்டோபர் 15 வரை மட்டுமே இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதில் இருக்கும் பெவிலியன்கள் மற்றும் அட்ராக்‌ஷன்களில் பங்கேற்பதற்கு ஒரு நாளைக்கு 10 ‘ஸ்மார்ட் கியூ’ முன்பதிவுகளையும் வழங்குகிறது, இதன் மூலம் நீண்ட வரிசையில் காத்திருப்பதை நீங்கள் தவிர்க்கலாம் என்று எக்ஸ்போ வலைத்தளம் பார்வையாளர்களுக்கு தெரிவித்துள்ளது.

“192 நாட்டு அரங்குகள், ஒவ்வொரு நாளும் 60 நேரடி நிகழ்வுகள், 200 க்கும் மேற்பட்ட உணவு மற்றும் குளிர்பான விற்பனை நிலையங்கள் மற்றும் தனித்துவமான அனுபவங்கள் நிரம்பிய மாபெரும் நிகழ்வான, எக்ஸ்போ 2020 ஐ முழுமையாக காண ஒரு முறை வருகை தந்தால் போதாது” என்று அமைப்பாளர்கள் வியாழக்கிழமை தெரிவித்துள்ளனர். எனவே பார்வையாளர்கள் இந்த சிறப்பு சலுகையைப் பெற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளரும் பாடலாசிரியருமான ஏ.ஆர்.ரஹ்மானால் வழிகாட்டப்பட்ட அனைத்து பெண்கள் ஃபிர்தாஸ் இசைக்குழுவின் நிகழ்ச்சி (all-women Firdaus Orchestra), ஸ்பேஸ் வீக் (space week), சிறந்த அரபு இசை திறமை கொண்ட ஜல்சாட் நைட்ஸ் (jalsat nights) மற்றும் சிறந்த விளையாட்டு, கலை மற்றும் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் தினசரி நிகழ்வுகள் ஆகியவை அடுத்த மாதத்தின் சிறப்பம்சங்கள் ஆகும்.

டிக்கெட் கட்டணங்கள்

டிக்கெட்டுகள் எக்ஸ்போ 2020 துபாய் ஆன்லைன் டிக்கெட் அலுவலகத்தில் ஆன்லைனில் கிடைக்கும். குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் டிக்கெட்டுகளை துபாய் மெட்ரோ நிலையங்கள் அல்லது Enoc மற்றும் Eppco சேவை நிலையங்களில் வாங்கிக் கொள்ளலாம்.

இந்நிகழ்வுக்கு ஒரு முறை நுழைய 95 திர்ஹம் கட்டணம் மற்றும் அதே நேரத்தில் ஆறு மாத பாஸ் 495 திர்ஹமிற்கு விற்கப்படுகிறது. 18 வயதிற்குட்பட்ட பார்வையாளர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு எக்ஸ்போவிற்குள் இலவசமாக நுழையலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!