வளைகுடா செய்திகள்

ஓமானில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு.. எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்….

ஓமானின் சில பகுதிகளில் நேற்று (வெள்ளிக்கிழமை) மழை பெய்திருந்த நிலையில் இன்றும் மழை தொடர வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி ஓமானில் உள்ள அல் ஹஜர் மலைகள், தோஃபர் கவர்னரேட் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று மதியம் 12 மணி முதல் ஆங்காங்கே இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும், கூடவே பலத்த காற்று வீசக்கூடும் என்றும் ஓமான் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மோசமான வானிலையால் பாதிக்கப்படும் பகுதிகள்:

  • அல் ஹஜர் மலைகள்
  • அல் தகிலியா
  • தெற்கு அல் பதீனா
  • மஸ்கட், அல் தாஹிரா
  • வடக்கு அல் ஷர்கியா
  • வடக்கு அல் பதீனா
  • அல் புரைமி

மேலும், ஓரிரு இடங்களில் 10 முதல் 30 மிமீ வரை பலத்த மழை பெய்யும் என்று ஓமான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதேசமயம், கனமழையின் போது மோசமான கிடைமட்டத் தெரிவுநிலை (visibility) உருவாகும் என்றும் கூறப்படுகிறது. எனவே, மாறிவரும் வானிலையின் போது வெளியே செல்லும் பொதுமக்கள் பின்வரும் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். அவை:

  1. பள்ளமான பகுதிகள் மற்றும் பள்ளத்தாக்குகளுக்கு அருகில் செல்வதைத் தவிர்க்கவும்.
  2. பள்ளத்தாக்குகளில் நீந்த முயற்சி செய்ய வேண்டாம்.
  3. குழந்தைகளை எப்போதும் கண்காணித்துக் கொண்டே இருக்கவும்
  4. மழை நேரங்களில் பள்ளத்தாக்குகளை கடக்க வேண்டாம்.

Related Articles

Back to top button
error: Content is protected !!