அமீரக செய்திகள்

துபாயில் 100 மீட்டர் உயரத்தில் திறக்கப்படவுள்ள மிக நீளமான நீச்சல்குளம் ‘இன்ஃபினிட்டி ஸ்கை பூல்’..!!

பொதுவாக பெரும்பாலானோருக்கு பிடித்த பொழுதுபோக்குகளில் ஒன்றாக இருப்பது தண்ணீரில் நீந்துவதுதான். குளமோ, கடலோ, அருவியோ எந்த இடமாக இருந்தாலும் அதில் நீந்துவதும் குளிப்பதும் அலாவதியான மகிழ்ச்சியையும் குதூகலத்தையும் தரும். இந்நிலையில் ஆடம்பரத்துக்கு பெயர்போன துபாயில் நீச்சல் குளமானது 100 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டு திறக்கப்படவுள்ளது.

இதே போன்ற அமைப்புகள் மற்ற நாடுகளில் இருந்தாலும் அமீரகத்தில் இந்தளவு உயரத்தில் நீச்சல்குளம் அமைக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். அமீரகத்தில் இந்த ஆண்டின் இறுதிக்குள் இந்த மிக நீளமான இந்த இன்ஃபினிட்டி ஸ்கை பூல் திறக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நீளமான குளத்தில் மிதக்கும் அனுபவத்தைத் தரும் இடத்தை எதுவும் மிஞ்சுவதில்லை.

துபாயின் பிரபல அட்லாண்டிஸ் துபாய் மற்றும் One&Only போன்றவற்றின் டெவலப்பரான ஹோட்டல் டெவலப்பர் கெர்ஸ்னர் One Za’abeel இல் அமீரகத்தின் மிக நீளமான குளத்தை அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த குளம் நூறு மீட்டர் உயரமான கட்டமைப்பின் மேல் அமைந்திருக்கும் One Za’abeel இரட்டைக் கோபுரங்களுக்கு இடையில் உள்ள உலகின் மிக நீளமான கான்டிலீவரான (Cantilever- தாங்காதாரமாக நிற்கும் ஒரு கட்டிட பகுதி) தி லிங்கில் (The Link) அமைக்கப்படும் என கூறப்படுகிறது.

மேலும், இத்திட்டத்தில் துபாய் ஸ்கைலைனின் தெளிவான காட்சிகளின் பின்னணியை பார்க்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. அத்துடன் புர்ஜ் கலீஃபா மற்றும் டவுன்டவுன் துபாயின் நவீன ஸ்கைலைன் ஒரு பக்கத்திலும், மறுபுறம் ஜபீல் பூங்காவின் அற்புதமான 360° காட்சிகளையும் இங்கிருந்து காணலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தனை அனுபவங்களை ஒட்டு மொத்தமாக வைத்துள்ள இந்த நீளமான குளம் இந்தாண்டின் நான்காம் காலாண்டில் திறக்கப்படும் என்றும், இந்த One Za’abeel பழைய மற்றும் புதிய துபாயை ஒன்றிணைக்கும் இடத்தில் அமைந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!