அமீரக செய்திகள்

ஈத் விடுமுறைக்கு பயணிக்கவுள்ள பயணிகளின் கவனத்திற்கு..!! விமான நிறுவனங்கள் தடை செய்துள்ள பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டாம் என அறிவுரை…!!

உலகெங்கிலும் உள்ள இஸ்லாமிய சமூகத்தினர் மற்றும் குடியிருப்பாளர்கள் புனித ஈத் அல் அதா விடுமுறை மற்றும் கோடை விடுமுறையை அனுபவிக்க தயாராகி வரும் நிலையில், பயணிகள் அனைவரும் விமானப் பயணத்தின் போது லக்கேஜ்களில் எந்த பொருட்களைக் கொண்டுவர அனுமதி உண்டு மற்றும் என்னவெல்லாம் தடை செய்யப்பட்டுள்ளது என்பதைத் தெரிந்து கொள்வது நல்லது.

எனவே, விமான நிலையத்தைச் செல்வதற்கு முன், சிக்கலை ஏற்படுத்தக் கூடிய எந்த பொருட்களையும் லக்கேஜ்களில் வைக்காமல் இருப்பதைப் பயணிகள் உறுதி செய்து கொள்ளலாம். இது குறித்து அமீரக விமான நிலையங்கள் வெளியிட்டுள்ள தகவல் குறித்து கீழே காணலாம்.

பொதுவாக பயணிகளின் பாதுகாப்புக்கு தீங்கு விளைவிக்கும் அல்லது விமானத்தை சேதப்படுத்தும் பொருட்களை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என்று துபாயை மையமாக கொண்டு இயங்கும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் தனது இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது. அதன்படி, அனைத்து ஸ்மார்ட் பேலன்ஸ் வீல்களும் (லித்தியம் பேட்டரிகள் அகற்றப்பட்டிருந்தாலும்) செக்-இன் அல்லது கேரி-ஆன் பேக்கேஜாக கொண்டு செல்லக் கூடாது.

எமிரேட்ஸ் நிறுவனம் தடை செய்துள்ள பொருட்கள்:

பாதுகாப்பு காரணங்களுக்காக, ஹோவர்போர்டுகள் (hoverboards), மினி-செக்வேஸ் (mini-Segways) மற்றும் ஸ்மார்ட் அல்லது செல்ப் பேலன்சிங் வீல்ஸ் (smart or self-balancing wheels) போன்ற மோட்டார் பொருத்தப்பட்ட தனிப்பட்ட வாகனங்களுக்கு அனுமதி கிடையாது.

அட்டாச் கேஸ்: விமான நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டவற்றைத் தவிர்த்து, லித்தியம் பேட்டரிகள் அல்லது பைரோடெக்னிக் பொருட்கள் போன்ற ஆபத்தான பொருட்களை உள்ளடக்கிய பாதுகாப்பு வகை அட்டாச் கேஸ்கள், பணப் பெட்டிகள், பணப் பைகள் போன்றவை முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளன.

எரிபொருள்: பயணிகளின் செக்-இன் அல்லது கைகளில் எடுத்துச் செல்லும் சாமான்களில் இலகுவான எரிபொருளை எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது.

செயலிழக்கச் செய்யும் சாதனங்கள் (Disabling device): சோதனையிடப்பட்ட மற்றும் எடுத்துச் செல்லும் சாமான்களில், மேஸ் (mace) போன்ற செயலிழக்க வைக்கும் சாதனங்கள் மற்றும் எரிச்சலூட்டும் அல்லது செயலிழக்கச் செய்யும் பொருளைக் கொண்ட பெப்பர் ஸ்ப்ரே ஆகியவை தடைசெய்யப்பட்டுள்ளன.

எலக்ட்ரோஷாக் ஆயுதங்கள்:  வெடிபொருட்கள், compressed gases மற்றும் லித்தியம் பேட்டரிகள் போன்ற ஆபத்தான பொருட்களைக் கொண்ட எலக்ட்ரோஷாக் ஆயுதங்கள் (Tasers) போன்றவற்றிற்கு அனுமதி கிடையாது.

வெடி பொருட்கள்: எளிதில் தீப்பற்றக் கூடிய அனைத்து பட்டாசுகள் மற்றும் கிறிஸ்துமஸ் பட்டாசுகள், பாட்டில் ராக்கெட்டுகள் போன்ற வெடிபொருட்களைக் கொண்ட பிற பொருட்கள் மற்றும் தீப்பொறிகள் போன்றவற்றை எடுத்துச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

விமானத்தில் பயணிக்கக்கூடிய நபர்கள் எடுத்துச்செல்ல மற்றும் தடைவிதிக்கப்பட்டுள்ள பொருட்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பொருட்கள் செக்-இன் லக்கேஜில் வைக்க அனுமதி எடுத்துச் செல்லும் லக்கேஜில் வைக்க அனுமதி
ஆல்கஹால் உண்டு உண்டு
பேட்டரிகள் இல்லை உண்டு
ட்ரோன்கள் உண்டு இல்லை
குளிரூட்டப்பட்ட திரவ நைட்ரஜனைக் கொண்ட இன்சுலேட்டட் பேக்கேஜிங் உண்டு உண்டு
ரேடியோஐசோடோபிக் கார்டியாக் பேஸ்மேக்கர்கள் இல்லை உண்டு

எதிஹாட் விமான நிறுவனம் தடை செய்துள்ள பொருட்கள்:

அபுதாபியை மையமாக கொண்டு இயங்கும் எதிஹாட் ஏர்வேஸ் இணையதளத்தின் படி, எடுத்துச் செல்ல தடைசெய்யப்பட்ட மற்றும் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ள சில பொருட்களைப் பின்வருமாறு பார்க்கலாம்.

>> அனைத்து எதிஹாட் விமானங்களிலும் கடுமையான வாசனையுள்ள கெட்டுப்போக கூடிய பொருட்கள் எடுத்துச்செல்ல தடைசெய்யப்பட்டுள்ளன.

>> பயணிகள் கத்தி, அம்புகள், மற்றும் ஸ்கால்பெல்ஸ் போன்ற கூர்மையான பொருட்களை தங்கள் செக்-இன் லக்கேஜ்களில் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுகிறது.

>> திரவங்கள், ஏரோசோல்கள் மற்றும் ஜெல்கள் போன்றவை செக்-இன் லக்கேஜ்களில் அனுமதிக்கப்படுகிறது. இருப்பினும், அதன் அளவு 100 மில்லிக்குள் இருக்க வேண்டும்.

>> மடிக்கணினிகள், டேப்லெட்டுகள் மற்றும் கேமராக்கள் உள்ளிட்ட எலெக்ட்ரானிக் சாதனங்கள் பொதுவாக எடுத்துச் செல்லும் பைகளில் வைக்க அனுமதிக்கப்படுகின்றன. ஆனால், பாதுகாப்பு சோதனைகளின் போது, அவற்றை தனித்தனியாக ஸ்க்ரீனிங் செய்ய வேண்டியிருக்கும்.

>> நீங்கள் வழக்கமாக எடுத்துக் கொள்ளும் மருந்து அல்லது உங்களுக்கு சிறப்பு மருந்துகள் தேவைப்பட்டால், மருந்துச் சீட்டின் நகல் அல்லது மருத்துவரின் குறிப்பைக் (prescription) கொண்டு வருவது நல்லது என்று எதிஹாட் குறிப்பிட்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!