அமீரக செய்திகள்

துபாய்: டிரைவிங் லைசன்ஸ வீட்டிலேயே மறந்து விட்டீர்களா..?? ரெண்டே கிளிக்கில் டிஜிட்டல் லைசன்ஸ பெற RTAவின் ஆலோசனை..!!

துபாயின் சாலையில் வாகனம் ஓட்டிக்கொண்டிருக்கும் போது திடீரென  டிரைவிங் லைசன்ஸை வீட்டிலேயே மறந்து விட்டதை அறிந்து பீதியடைந்ததுண்டா..?? இனி அந்த கவலை வேண்டாம். ஏனெனில் இப்போது அனைவரிடமும் எளிதில் அணுகக்கூடிய டிஜிட்டல் டிரைவிங் லைசன்ஸ் பெறுவதற்கான முறையை துபாய் அறிமுகப்படுத்தியுள்ளது.

துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) குடியிருப்பாளர்கள் தங்கள் ஓட்டுநர் உரிமங்களை தங்கள் ஆப்பிள் வாலட்களில் இணைத்துக்கொள்ளலாம் என்பதை  நினைவூட்டியுள்ளது. குறிப்பாக, இந்த அம்சம் தற்போது ஆப்பிள் பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது.

பெரும்பாலான வாகன ஓட்டிகள் தங்கள் டிரைவிங் லைசன்ஸ்களின் புகைப்படத்தை ஸ்மார்ட்ஃபோனிலும், டிஜிட்டல் கார்டை தங்கள் கோப்புகளில் எங்காவதும் சேமித்து வைத்திருக்கிறார்கள். இது போன்ற முக்கிய ஆவணங்களை எங்காவது வைத்திருந்தால், அவற்றின் காப்புப்பிரதியை இப்படித்தான் பலரும் சேமித்து வைக்கின்றனர். இது சில நேரங்களில், நீங்கள் எந்த ஃபைல்களில் சேமித்து வைத்தீர்கள் என்று தேடும் சிரமத்தை உண்டாக்கும்.

ஆனால், ஐபோன் வாலட்களில் டிஜிட்டல் கார்டுகளை சேர்த்த பின்னர், அவற்றை மீண்டும் அணுகுவது எளிதாகும். அதாவது, இ-வாலட்டைத் திறக்க ஒருவர் தனது ஐபோன்களின் பக்கவாட்டு பொத்தானை இருமுறை கிளிக் செய்ய வேண்டும். பின்னர், லைசென்ஸ் மற்ற அட்டைகளின் ஒரு பகுதியாக பாப் அப் செய்யும்.

எப்படி ஐபோன் வாலட்களில் உரிமங்களை சேர்ப்பது?

  • RTA அப்ளிகேஷனை டவுன்லோட் செய்து, உங்கள் கணக்கை உருவாக்கிக் கொள்ளவும்.
  • உங்கள் டிராஃபிக் கோப்புகளை (ஓட்டுநர் உரிமம் அல்லது வாகன உரிமம்) அப்ளிகேஷனில் இணைக்க வேண்டும்.
  • அப்ளிகேஷனின் முகப்புப் பக்கத்தின் கீழ் பகுதியில் உள்ள பொத்தான்கள்/ஐகான்களில் “My Docs” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  • பின்னர் “My License” டேப்பைத் திறந்ததும் கார்டின் டிஜிட்டல் பதிப்பைக் காணலாம். கார்டின் கீழே, “Add to Apple Wallet” என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும்.
  • இறுதியாக, உங்கள் இ-வாலட்டில் உங்கள் உரிமத்தை தானாகக் காணலாம்.

ஓட்டுநர் உரிமம் தவிர, உங்கள் வாகன உரிமத்தையும் இதே போல் சேமித்துக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!