அமீரக சட்டங்கள்

அமீரகத்தில் வேலையை ராஜினாமா செய்தால் வருடாந்திர டிக்கெட்டைப் பெற உரிமை உண்டா? உங்களின் சந்தேகளுக்கான தீர்வு இங்கே…

ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரியும் ஒவ்வொரு வெளிநாட்டினருக்கும் தங்களது பணி ஒப்பந்தம் மற்றும் உரிமைகள் குறித்து பல்வேறு கேள்விகளும் சந்தேகங்களும் இருக்கும். அதுபோலவே, வெளிநாட்டு ஊழியர் ஒருவர் அமீரகத்தில் வேலையை ராஜினாமா செய்திருந்தால், நாடு திரும்புவதற்கான டிக்கெட் (repatriation ticket) மற்றும் வருடாந்திர டிக்கெட்டைப் (annual ticket) பெற உரிமை உள்ளதா என்பதும் பலரது சந்தேகமாக இருக்கலாம்.

இது குறித்து அமீரக குடியிருப்பாளர் ஒருவரும் தனது சந்தேகத்திற்கு விளக்கம் கேட்டு சம்பந்தப்பட்ட துறை வல்லுநர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார். அவரது கேள்விக்கு அளிக்கப்பட்ட பதில்களின் அடிப்படையில், வேலையை ராஜினாமா செய்தவருக்கு அமீரக சட்டம் அளிக்கும் உரிமை என்ன என்பதை இங்கு பார்க்கலாம்.

சமீபத்தில் வேலையை ராஜினாமா செய்த ஒரு அமீரக குடியிருப்பாளர் எழுப்பிய கேள்வியில், தனது டிக்கெட்டுகளை முதலாளியிடம் இருந்து திரும்பப் பெற எனக்கு என்னென்ன விருப்பங்கள் உள்ளது என்பது பற்றிய கேட்டுள்ளார். மேலும், அவரது ஒப்பந்தத்தில் “ஒரு வருடம் முடிந்தவுடன் அவரது சொந்த ஊருக்கு up and down டிக்கெட் வழங்கப்படும்” என்று குறிப்பிட்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

அதன்படி நிறுவனத்தில் ஒரு வருடத்தை நிறைவு செய்துவிட்டு, கடந்த மே மாத இறுதியில் இரண்டு மாத நோட்டீஸ் உடன் வேலையை ராஜினாமா செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆகவே, டிக்கெட்டுகளை பெறுவதற்கு அவருக்கு தகுதி இருக்கிறதா மற்றும் வேறு நிறுவனத்தில் பணியமர்த்தப்பட்டிருந்ததால், நாடு திரும்புவதற்கான டிக்கெட் கிடைக்குமா என்று வினவியுள்ளார்.

UAE தொழிலாளர் சட்டத்தின் பிரிவு 13(12) – மத்திய ஆணை சட்டம் எண். 2021 இன் 33கட்டுரையின் பிரிவு 12 கூறுவது என்னவென்றால், ஒரு ஊழியர் அவரது வேலை ஒப்பந்தத்தை நிறுத்தாமல், வேறு ஒரு முதலாளியுடன் சேராமல் இருக்கும் வரை, அவரருக்கு நாடு திரும்புவதற்கான டிக்கெட்டுகளைப் பெறுவதற்கு உரிமை உண்டு.

ஒரு வேளை, வேலையை ராஜினாமா செய்திருந்தால் நாடு திரும்புவதற்கான டிக்கெட்டுகளைப் பெற முடியாது. ஆனால், அவரது பணி ஒப்பந்தத்தில், “ஒரு வருடம் முடிந்தவுடன் அவரது சொந்த ஊருக்கு up and down டிக்கெட் வழங்கப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது எனில், பணிநீக்கத்திற்கான காரணத்தைப் பொருட்படுத்தாமல், அதைப் பெறுவதற்கு அவர் தகுதியுடைவராக இருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!