அமீரக செய்திகள்

துபாய் விமான நிலையத்தில் அதிகரிக்கும் பயணிகள் போக்குவரத்து.. கூட்ட நெரிசலைத் தவிர்க்க ஐந்து குறிப்புகள்..!!

துபாய் சர்வதேச விமான நிலையத்தில் எதிர்வரும் ஆகஸ்ட் 26 மற்றும் 27 ஆகிய இரண்டு நாட்களில் பயணிகளின் போக்குவரத்து அரை மில்லியனுக்கும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக துபாய் விமான நிலைய அதிகாரிகள் கட்ட ஆகஸ்ட் 16 அன்றே இது குறித்த ஆலோசனையை வெளியிட்டிருந்தனர். அதில் வரும் வாரங்களில் மக்கள் தங்கள் கோடை விடுமுறை முடிந்து அமீரகத்திற்கு திரும்புவதால் விமான நிலையம் பரபரப்பாக இருக்கும் என்று தெரிவித்திருந்தனர்.

குறிப்பாக, ஆகஸ்ட் 16 முதல் ஆகஸ்ட் 28 வரையிலான 13 நாள் காலப்பகுதியில், சராசரி தினசரி போக்குவரத்து 258,000 பயணிகளை எட்டியதாக துபாய் விமான நிலையம் தெரிவித்துள்ளது. எனவே, இந்த காலகட்டத்தில் நீங்கள் அமீரகத்திற்கு பயணிக்க திட்டமிட்டிருந்தால், துபாய் சர்வதேச விமான நிலையத்தில் (DXB) நெரிசலைச் சமாளிக்க சில குறிப்புகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளன:

1. குழந்தைகளுக்கான பாஸ்போர்ட் கவுண்டர்களைப் பயன்படுத்தவும்:

நீங்கள் 4 வயது முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுடன் பயணம் செய்கிறீர்கள் என்றால், DXBயில் டெர்மினல் 1 மற்றும் டெர்மினல் 2 இல் உள்ள குழந்தைகளுக்கான பாஸ்போர்ட் கட்டுப்பாட்டு கவுண்டர்களைப் பயன்படுத்தலாம். இந்த பிரத்யேக கவுண்டர்களில் குழந்தைகள் தங்கள் பாஸ்போர்ட்டை தானே ஸ்டாம்ப் செய்து எளிதில் செயல்முறையை முடிக்கலாம்.

2. ஸ்மார்ட் கேட்ஸைப் பயன்படுத்தவும்:

விமான நிலையத்தில் நீங்கள் ஸ்மார்ட் கேட்ஸைப் பயன்படுத்துவதன் மூலம், சில நொடிகளில் பாஸ்போர்ட் கட்டுப்பாட்டை முடிக்கலாம். GDRFA இணையதளத்தின்படி, பயணிகள் பாஸ்போர்ட் கட்டுப்பாட்டு நடைமுறைகளை முடிக்க, கேட்களில் மற்றும் கருவிழி அங்கீகார தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நொடிகளில் செயல்முறையை முடிக்கலாம்.

துபாய் விமான நிலையங்களில் யாரெல்லாம் ஸ்மார்ட் கேட்களை பயன்படுத்த முடியும்?

GDRFAD இணையதளத்தின்படி, நீங்கள் ஸ்மார்ட் கேட்ஸைப் பயன்படுத்த வேண்டுமெனில், அதற்காக பதிவு செய்திருக்க வேண்டும். மேலும், சமீபத்தில் DXB வழியாகப் பயணம் செய்த அனைத்து பயணிகளும் பாஸ்போர்ட் கட்டுப்பாட்டுச் சோதனைச் சாவடி வழியாகப் பயணித்தபோது பதிவு செய்யப்பட்டிருக்கலாம் என்று இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக, 1.2 மீட்டர் (4 அடி) மற்றும் அதற்கு மேல் உயரம் கொண்ட பதிவு செய்யப்பட்ட பயணிகள் ஸ்மார்ட் கேட்களைப் பயன்படுத்தலாம் என்றும் கூறப்படுகிறது.

நீங்கள் அமீரக குடியிருப்பாளராக இருந்தால், https://gdrfad.gov.ae/ என்ற லிங்க் மூலம், உங்கள் பாஸ்போர்ட் எண் அல்லது எமிரேட்ஸ் ஐடியை வழங்கி, பயணம் செய்வதற்கு முன் ஸ்மார்ட் கேட்ஸைப் பயன்படுத்த நீங்கள் தகுதியுள்ளவரா என்பதைச் சரிபார்க்கலாம். ஸ்மார்ட் கேட்ஸைப் பயன்படுத்த அனுமதிக்கப்படும் வகைகள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது:

  • அமீரக மற்றும் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (GCC) குடிமக்கள்
  • அமீரக குடியிருப்பாளர்கள் (residents)
  • அரைவல் விசாவில் மற்றும் ஷெங்கன் யூனியன் பகுதியில் இருந்து வருபவர்கள்
  • முன் வழங்கப்பட்ட விசா வைத்திருப்பவர்கள்

3. மெட்ரோவில் விமான நிலையத்திற்கு பயணிக்கவும்:

துபாய் ஏர்போர்ட்ஸ் வெளியிட்ட ஆலோசனையின்படி, துபாய் சர்வதேச விமான நிலையத்தை (DXB) நோக்கிச் செல்லும் சாலை, பீக் ஹவர்ஸ் என்று சொல்லக்கூடிய போக்குவரத்து அதிகமான நேரங்களில் பிஸியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, நீங்கள் துபாய் மெட்ரோ ரெட் லைனில் டெர்மினல் 1 மற்றும் டெர்மினல் 3 ஆகிய இடங்களில் உள்ள நிலையங்களுடன் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறது. ஆனால் மெட்ரோவைப் பயன்படுத்த, உங்களிடம் நோல் கார்டு இருக்க வேண்டும்.

துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் (RTA) படி, மெட்ரோவில் பயணிக்க ஒரு பயணிக்கு இரண்டு சூட்கேஸ்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. அதிலும் குறிப்பாக, ஒரு பெரிய சூட்கேஸின் அளவு 81cm x 58cm x 30cm ஐ விட அதிகமாக இருக்கக்கூடாது. ஒரு சிறிய சூட்கேஸ், 55cm x 38cm x 20cm ஐ விட அதிகமாக இருக்கக்கூடாது.

4. டெர்மினல் 1 அல்லது 3 இல் உங்களை அழைத்துச் செல்ல யாராவது வந்தால், பார்க்கிங் பகுதிக்குச் செல்லவும்

விமான நிலையத்தில் டெர்மினல் 1 மற்றும் 3 இல் அரைவல் டெர்மினலுக்கு வெளியே உள்ள பிரதான நுழைவாயில் பகுதி பொதுப் போக்குவரத்து மற்றும் அங்கீகரிக்கப்பட்ட விமான நிலைய வாகனங்களுக்கு மட்டுமே அணுகக்கூடியதாக இருக்கும். எனவே, உங்களை அழைத்துச் செல்ல வரும் நண்பர் அல்லது குடும்ப உறுப்பினர் பார்க்கிங் பகுதியை பயன்படுத்த வேண்டும்.

டெர்மினல் 1ல் பார்க்கிங் கட்டணங்கள்:

கார் பார்க் A – பிரீமியம் பார்க்கிங்

இந்த கார் பார்க்கிங் டெர்மினல் 1 நுழைவாயிலிலிருந்து இரண்டு முதல் மூன்று நிமிட நடை தூரத்தில் உள்ளது. கட்டணங்கள் பின்வருமாறு:

  • ஐந்து நிமிடங்கள்: 5 திர்ஹம்
  • 15 நிமிடங்கள்: 15 திர்ஹம்
  • 30 நிமிடங்கள்: 30 திர்ஹம்
  • இரண்டு மணிநேரம் வரை: 40 திர்ஹம்
  • மூன்று மணிநேரம்: 55 திர்ஹம்
  • நான்கு மணிநேரம்: 65 திர்ஹம்
  • ஒரு நாள்: 125 திர்ஹம்
  • ஒவ்வொரு கூடுதல் நாளும்: 100 திர்ஹம்

கார் பார்க் B – எகானமி பார்க்கிங்:

இந்த பார்க்கிங்கை நீங்கள் டெர்மினல் 1 இலிருந்து ஏழு முதல் ஒன்பது நிமிட நடைப்பயணத்தில் அடையலாம். கட்டண விபரங்கள் இதோ:

  • ஒரு மணிநேரம்: 25 திர்ஹம்
  • இரண்டு மணிநேரம்: 30 திர்ஹம்
  • மூன்று மணிநேரம்: 35 திர்ஹம்
  • நான்கு மணிநேரம்: 45 திர்ஹம்
  • ஒரு நாள்: 85 திர்ஹம்
  • ஒவ்வொரு கூடுதல் நாளும்: 75 திர்ஹம்

டெர்மினல் 3ல் பார்க்கிங் கட்டணங்கள்:

இது வருகையாளர்களின் நுழைவாயிலிலிருந்து இரண்டு முதல் மூன்று நிமிட தொலைவில் உள்ளது.

  • 5 நிமிடங்கள் – 5 திர்ஹம்
  • 15 நிமிடங்கள் – 15 திர்ஹம்
  • 30 நிமிடங்கள் – 30 திர்ஹம்
  • இரண்டு மணிநேரம் வரை – 40 திர்ஹம்
  • மூன்று மணி நேரம் – 55 திர்ஹம்
  • நான்கு மணிநேரம் – 65 திர்ஹம்
  • ஒரு நாள் – 125 திர்ஹம்
  • ஒவ்வொரு கூடுதல் நாளும் – 100 திர்ஹம்

டெர்மினல் 2ல் பார்க்கிங் கட்டணங்கள்

நீங்கள் டெர்மினல் 2 இல் தரையிறங்கினால், விருந்தினர்களை அழைத்துச் செல்லும் நபர்களுக்கு முன்தளத்தை அணுக முடியும். இருப்பினும், நீங்கள் பார்க்கிங் பகுதியைப் பயன்படுத்த வேண்டும் என்றால், கட்டணத்தின் முறிவு இங்கே:

கார் பார்க் A – பிரீமியம் பார்க்கிங்

இந்த கார் பார்க்கிங் டெர்மினல் 2 இலிருந்து மூன்று முதல் ஐந்து நிமிட நடைப்பயணத்தில் உள்ளது.

  • ஒரு மணிநேரம் – 30 திர்ஹம்ஸ்
  • இரண்டு மணிநேரம் – 40 திர்ஹம்ஸ்
  • மூன்று மணிநேரம் – 55 திர்ஹம்ஸ்
  • நான்கு மணிநேரம் – 65 திர்ஹம்ஸ்
  • ஒரு நாள் – 125 திர்ஹம்ஸ்
  • ஒவ்வொரு கூடுதல் நாளும் – 100 திர்ஹம்ஸ்

கார் பார்க் B – எகனாமிக் பார்க்கிங்

இந்த கார் பார்க்கிங்கிற்கு டெர்மினல் 2 இலிருந்து 10 முதல் 12 நிமிட நடை தூரத்தில் உள்ளது.

  • ஒரு மணிநேரம் – 15 திர்ஹம்ஸ்
  • இரண்டு மணிநேரம் – 20 திர்ஹம்ஸ்
  • மூன்று மணிநேரம் – 25 திர்ஹம்ஸ்
  • நான்கு மணிநேரம் – 30 திர்ஹம்ஸ்
  • ஒரு நாள் – 70 திர்ஹம்ஸ்
  • ஒவ்வொரு கூடுதல் நாளும்  – 50 திர்ஹம்ஸ்

டாக்ஸியில் பயணிப்பதற்கான வழிமுறை

இதற்குப் பதிலாக, நீங்கள் டாக்ஸியில் செல்வதாக இருந்தால், உங்கள் லக்கேஜ்களை சேகரித்தவுடன், டாக்ஸி ஸ்டாண்டுகளுக்கான அடையாளங்களைப் பின்பற்றவும், அங்கு 24 மணி நேரமும் பயணிகளுக்காக காத்திருக்கும் டாக்ஸிகளைக் காணலாம். RTA வின் விமான நிலைய டாக்ஸிகளின் கட்டணம் 25 திர்ஹம் இல் தொடங்குகிறது.

மேலும், நீங்கள் கரீம் அல்லது ஊபரில் இருந்து ஒரு தனியார் டாக்ஸியைப் பெற விரும்பினால், அவற்றிற்கும் தனித்தனி பாதைகள் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி, துபாய் சர்வதேச விமான நிலையம் (DXB) டெர்மினல்கள் 1, 2 மற்றும் 3 இல் துபாய் டாக்ஸி கார்ப்பரேஷன் (DTC) இலிருந்து நீங்கள் லிமோசின் சேவையையும் பெறலாம். விமான நிலையத்தில் லிமோசின் சேவைக்கான கட்டணம் 25 திர்ஹம் முதல் தொடங்குகிறது, குறிப்பாக, கிலோமீட்டருக்கு 3.67 திர்ஹம் என கணக்கிடப்படுகிறது.

Related Articles

Back to top button
error: Content is protected !!