வளைகுடா செய்திகள்

கத்தார்: தொழிலாளர்களின் நலன்களே முக்கியம் … சட்ட சீர்திருத்தங்களை எடுத்துரைத்த தொழிலாளர் அமைப்பு அதிகாரி..!!

தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாப்பதில் கத்தார் நாடு முனைப்புடன் செயல்படுவதாக கத்தார் அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கத்தாரில் உள்ள சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) திட்ட அலுவலகத்தின் தலைவர், Max Tunon சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்வில் இதனை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறும்பொழுது, தொழிலாளர்களின் சம்பந்தமான கத்தார் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் கத்தார் தேசிய தொலைநோக்கு 2030 எனும் திட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளன என்றும், தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் உண்மையான அர்ப்பணிப்பைக் காட்டுகின்றன என்றும் கூறியுள்ளார்.

தேசிய மனித உரிமைகள் குழு (NHRC) நடத்திய ‘வேலைத் தளங்களில் வெப்ப அழுத்தம்’ பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இதைப் பற்றி பேசிய Tunon, “தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாப்பதில் உண்மையான அர்ப்பணிப்பு இருப்பதை நாங்கள் அறிவோம். பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் தொடர்பாக பல நாடுகளை விட கத்தார் நாட்டின் சட்டம் மேலும் முன்னேறிச் செல்வதை நிரூபித்துள்ளது. தொழிலாளர்கள் நலனை மேம்படுத்துவதில் சட்டம் முக்கியமானதாகும்” என்று தெரிவித்துள்ளார்.

தொழிலாளர் அமைச்சகம் 2021 ஆம் ஆண்டின் ஆணை எண். 17-ன் படி, கோடை காலத்தில் வெப்பம் அதிகரிக்கும் என்பதால் நண்பகலில் தொழிலாளர்கள் வேலையில் ஈடுபடுவதை தவிர்த்து, இதன் அடிப்படையில் கோடை காலங்களில் தொழிலாளர்கள் வெளிப்புற வேலைகளில் ஈடுபடுவதை தடை செய்தது. மேலும், வெப்ப அழுத்தம் மற்றும் பணியிடப் பாதுகாப்பு குறித்து கருத்து தெரிவித்த Tunon, உலக நாடுகள் அனைத்திலும் கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் போது, தொழிலாளர்களின் நலன்களை பாதுகாக்க இது போன்ற சட்டம் அவசியம் என கூறியுள்ளார்.

தொழிலாளர்களின் நலன்கள் தொடர்பாக கத்தாரின் சீர்திருத்தங்களானது, மனித உரிமைகள் குழுக்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையால் (UN) அங்கீகரிக்கப்பட்டுள்ளன என்றும் தொழிலாளர் சீர்திருத்தங்களில் கத்தார் நாடு முன்னணியில் உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், கத்தாரின் விரைவான உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் வளர்ந்து வரும் பொருளாதாரம் உலகெங்கிலும் நூறாயிரக்கணக்கான வெளிநாட்டினரை ஈர்த்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஏனென்றால், தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்காக நாடு விரிவான பல சீர்திருத்தங்களைச் செயல்படுத்தியுள்ளது.

தொழிலாளர்களின் நலனுக்காக புதிய சட்டங்களை அறிமுகம், பெரும்பான்மையான தொழிலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு வெளியேறும் அனுமதி தேவையில்லாத்து, தொழிலாளர்கள் தங்களுடைய முந்தைய முதலாளியிடமிருந்து தடையில்லா சான்றிதழ் (NOC) வாங்க தேவையில்லாத து சுதந்திரமாக வேலையை மாற்ற அனுமதிக்கும் நடைமுறைகள், பாரபட்சமற்ற குறைந்தபட்ச ஊதியம், இந்தியா, இலங்கை, இந்தோனேசியா, நேபாளம், பங்களாதேஷ், பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் மற்றும் துனிசியாவில் கத்தார் விசா மையங்களை (QVCs) நிறுவியது போன்ற பல நன்மைகளை தொழிலாளர்களுக்கு கத்தார் நாடு வழங்கியுள்ளது என்பதை அவர் எடுத்துரைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.

Related Articles

Back to top button
error: Content is protected !!