அமீரக சட்டங்கள்

அமீரகத்தில் பகுதி நேர வேலை புரிய முதலாளியிடம் ஒப்புதல் பெற வேண்டுமா..?? UAE வேலைவாய்ப்பு சட்டம் கூறுவது என்ன..??

அமீரகத்தில் பகுதி நேரமாக (part-time) வேலை செய்ய விரும்புகிறீர்களா? இருப்பினும், அது உங்களின் தற்போதைய வேலைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று கவலைப் படுகிறீர்களா? அப்படியானால், நீங்கள் அமீரகத்தின் பகுதி நேர ஒப்பந்தத்தின் விதிமுறைகளை தெரிந்து கொள்வது அவசியம்.

MOHRE இன் வேலைவாய்ப்பு விதிமுறைகளின் படி, உங்களின் முழுநேர வேலையில் வாரந்தோறும் 20 மணிநேரத்திற்கு குறையாமல் வேலை செய்வதை உறுதி செய்து, நீங்கள் உங்கள் அசல் முதலாளியின் ஒப்புதல் இல்லாமல், ஒன்றுக்கு மேற்பட்ட முதலாளிகளுக்கு பகுதி நேர வேலைமுறையின் மூலம் வேலை செய்யலாம்.

எத்தனை மணி நேரம் பகுதிநேர வேலை செய்யலாம்?

அமீரகத்தின் பகுதி நேர வேலை ஒப்பந்தம், ஒரு நபர் தனது முழுநேர வேலையை விட வாரத்திற்கு ஒரு மணி நேரம் குறைவாக மற்றொரு முதலாளியிடம் வேலை செய்ய அனுமதிக்கிறது. ஒரு ஊழியர் பகுதி நேர வேலை செய்கிறார் என்பதால், அது அவரது முழுநேர வேலை நேரத்தின் எண்ணிக்கையை விட குறைவாக இருக்க வேண்டும்.

பகுதி நேர வேலை ஒப்பந்தங்களை அறிமுகப்படுத்துவது தொடர்பான 2018 ஆம் ஆண்டின் அமைச்சக ஆணை எண். (31)இல், பகுதி நேர வேலை நேரமானது, சாதாரண வேலை நேரத்தை விட (ஒரு நாளைக்கு எட்டு மணிநேரம்) குறைவாக இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதில் சட்டப்பூர்வமாக பகுதி நேர வேலையில் வாரத்திற்கு குறிப்பிட்ட மணிநேரங்கள் வேலை செய்ய வேண்டும் என்று எதுவும் குறிப்பிடப்படவில்லை.

ஆகவே, பகுதி நேர வேலையில் எத்தனை மணிநேரம் வேலை செய்ய வேண்டும் என்பதை ஊழியர் மற்றும் முதலாளி ஆகிய இரு தரப்பினரும் நிர்ணயித்து ஒப்புக் கொள்ள வேண்டும். ஆனால், முழுநேர வேலையின் குறைந்தபட்ச வேலை நேரம் வாரத்திற்கு 20 மணிநேரம் என்று அமீரக தொழிலாளர் சட்டத்தின் பிரிவு 3இல் கூறப்பட்டுள்ளது.

சட்டப்பூர்வமாக பகுதிநேர வேலை செய்வதற்கான நிபந்தனைகள்:

  1. ஊழியர், அமைச்சகத்தால் நிர்ணயிக்கப்பட்ட திறன் நிலை 1, 2 அல்லது 3 வேலைகளின் கீழ் வர வேண்டும்.
  2. பணியமர்த்துபவர் அமைச்சகத்திடம் இருந்து பணி அனுமதி பெற வேண்டும்.

பணியமர்த்தும் நபர் பகுதி நேர வேலை அனுமதிக்கு விண்ணப்பிக்க, கையொப்பமிடப்பட்ட பகுதி நேர ஒப்பந்தத்தை அமைச்சகத்திடம் சமர்ப்பித்து பணி அனுமதியைப் பெறலாம். இதற்கு விண்ணப்பக் கட்டணம் 100 திர்ஹம் மற்றும் ஒப்புதல் கட்டணமாக 500 திர்ஹம் வசூலிக்கப்படும்.

யாரெல்லாம் பகுதி நேர வேலைக்கான ஒப்பந்தத்தை பெறலாம்?

ஊழியர் 18 வயதுக்கு மேற்பட்டவராக இருந்தால், 6 மாதங்களுக்கும் மேலாக செல்லுபடியாகும் பாஸ்போர்ட்டை வைத்திருந்தால் மற்றும் சரியான ரெசிடென்ஸியை வைத்திருந்தால் பகுதி நேர வேலை அனுமதி அனைத்து நாட்டினருக்கும் கிடைக்கும் என்று நிபுணர்கள் சிலர் கூறுகின்றனர்.

பகுதிநேர வேலைக்கு முழுநேரம் வேலை பார்க்கும் முதலாளியின் ஒப்புதல் தேவையில்லை என்றாலும், இரண்டாவது முதலாளியால் விண்ணப்பிக்கப்படும் பகுதி நேர வேலை அனுமதிகள் MOHRE ஆல் வழங்கப்படுகின்றன என்றும், இது அமைச்சகத்தில் பதிவுசெய்யப்பட்ட ஒரு நிறுவனமாக இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

நீங்கள் செய்யக்கூடிய பகுதி நேர வேலைக்கான முக்கிய வரம்பானது, உங்களை பணியமர்த்தும் நிறுவனம் ஒரு வர்த்தக நிறுவனமாக இருந்தால், அந்த வேலைக்கு பொருத்தமான நிபுணத்துவம் அல்லது கல்வி உங்களிடம் இருந்தாலே நீங்கள் ஒரு நிறுவனத்தின் பகுதி நேர விற்பனையாளராக பணியாற்றலாம் என்றும் கூறப்படுகின்றது.

முழுநேர முதலாளியின் போட்டியாளருக்கு ஊழியருக்கு பகுதி நேர வேலை புரியலாமா?

MOHRE இல் பதிவுசெய்யப்பட்ட ஊழியர்களின் விண்ணப்பத்தை மதிப்பாய்வு செய்யும் போது, ஒரு பகுதி நேர வேலை விண்ணப்பத்திற்கான ஊழியர் மற்றும் அவரது ஸ்பான்சர், நிறுவனத்தில் கொடுக்கப்படவுள்ள வேலை மற்றும் வணிகத்திற்கான அணுகலை அமைச்சகம் பெறும். எனவே, இந்த சமயங்களில் முரண்பாடு ஏற்பட்டால், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் முக்கிய முழுநேர முதலாளியைப் பாதுகாப்பதற்காக அந்த விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

அதுமட்டுமின்றி, நாட்டில் தேவையான அனுமதியின்றி, பணியமர்த்தப்படும் எந்தவொரு பகுதிநேர ஊழியரும் சட்டத்தால் தண்டிக்கப்படுவார் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். 2007 ஆம் ஆண்டின் ஃபெடரல் ஆணை எண். 2 இன் படி, ஒரு வெளிநாட்டவர் அதிகாரப்பூர்வ அனுமதியின்றி வேறொரு நிறுவனத்தில் பணிபுரிந்து பிடிபட்டால், பணியமர்த்தும் நிறுவனத்திற்கு 50,000 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!