அமீரக சட்டங்கள்

UAE: விசா காலாவதி ஆகிவிட்டதா..?? விதிக்கப்பட்டுள்ள அபராதத்தைச் சரிபார்த்து செலுத்துவது எப்படி..?? உங்களுக்கான வழிகாட்டி உள்ளே..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் டூரிஸ்ட் விசா, விசிட் விசா அல்லது ரெசிடென்ஸ் விசா என எந்த விசாவில் நீங்கள் நாட்டில் தங்கியிருந்தாலும், உங்கள் விசா காலாவதியாகும் தேதியை எப்போதும் நினைவில் வைத்திருப்பது அவசியம். ஏனென்றால், உங்கள் விசாவை நீங்கள் காலாவதியாக வைத்திருந்தால், ICPஆல் நிர்ணயிக்கப்பட்ட அபராதங்களை செலுத்த வேண்டியிருக்கும்.

எனவே, உங்கள் விசாவின் காலாவதி தேதியை நீங்கள் எப்படிக் கண்டறியலாம் மற்றும் உங்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் காலாவதியான அபராதங்களை எவ்வாறு சரிபார்க்கலாம் என்பதை பின்வருமாறு பார்க்கலாம்.

சுற்றுலா அல்லது விசிட் விசா எப்போது காலாவதியாகும்?

1. விசா நகலிலேயே சரிபாருங்கள்

நீங்கள் ICP அல்லது துபாயின் GDRFA அல்லது ஏஜென்சி மூலம் விசிட் விசா அல்லது சுற்றுலா விசாவிற்கு நேரடியாக விண்ணப்பித்தால், பதிவு செய்யப்பட்ட இ-மெயில் முகவரியில் உங்கள் விசா நகலைப் பெறுவீர்கள். இந்த விசா நகலில், விசா எண்ணுக்குப் பிறகு, ‘expiry date’ என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கும். இது நுழைவு அனுமதி எண் என்றும் குறிப்பிடப்படுகிறது.

2. ஆன்லைன் :

உங்கள் விசா செல்லுபடியை சரிபார்க்க ICP அல்லது GDRFA இன் இணையதளங்களையும் நீங்கள் பார்வையிடலாம். பின்வரும் இணையதளங்களில் ஏதேனும் ஒன்றைப் பார்வையிடுவதன் மூலம் நீங்கள் விசா நிலையைத் தெரிந்து கொள்ளலாம்.

இதில் உங்கள் பாஸ்போர்ட் எண், விசா எண் மற்றும் பிறந்த தேதியை வழங்குமாறு கேட்கப்படுவீர்கள். நீங்கள் விவரங்களை உள்ளிட்டதும், ‘நாட்டை விட்டு வெளியேறுவதற்கான கடைசி தேதியுடன் உங்கள் விசாவின் விவரங்கள் திரையில் தோன்றும்.

ரெசிடென்ஸ் விசாவின் காலாவதி தேதியை எவ்வாறு தெரிந்து கொள்வது?

1. விசா ஸ்டிக்கர்:

நீங்கள் ரெசிடென்ஸ் விசா வைத்திருப்பவராக இருந்தால், உங்கள் விசாவில் உள்ள ஸ்டாம்ப்பைப் பார்த்து காலாவதி தேதியைச் சரிபார்க்கலாம். ஒருவேளை, நீங்கள் சமீபத்தில் உங்கள் விசாவைப் புதுப்பித்திருந்தால் அல்லது அதற்கு விண்ணப்பித்திருந்தால், உங்கள் பாஸ்போர்ட்டில் விசா ஸ்டாம்ப் இல்லாமல் இருக்கலாம். அப்படி இருக்கும் பட்சத்தில், பின்வரும் படிகளைப் பின்பற்றுவதன் மூலம், உங்கள் விசாவின் டிஜிட்டல் வெர்ஷனை சரிபார்க்கலாம்.

2. எமிரேட்ஸ் ஐடி:

விசா மற்றும் எமிரேட்ஸ் ஐடி விண்ணப்ப நடைமுறைகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதால், காலாவதி தேதியைச் சரிபார்க்க உங்கள் எமிரேட்ஸ் ஐடி உதவியாக இருக்கும். உங்கள் எமிரேட்ஸ் ஐடியில் காலாவதியாகும் தேதியைநீங்கள் சரிபார்க்கலாம். உங்கள் விசா காலாவதியாகும் அதே தேதியிலேயே ஐடியும் காலாவதியாகும்.

3. ஆன்லைன்:

உங்கள் ரெசிடென்ஸ் விசாவின் காலாவதி தேதியைச் சரிபார்க்க, https://smartservices.ica.gov.ae/echannels/web/client/default.html#/fileValidity என்ற ICP இணையதளத்தையும் நீங்கள் பார்வையிடலாம். இதில் உங்கள் பாஸ்போர்ட் எண் அல்லது எமிரேட்ஸ் ஐடி எண் மற்றும் பிறந்த தேதியை வழங்குமாறு கேட்கப்படுவீர்கள். நீங்கள் விவரங்களை உள்ளிட்டதும், ‘File expiry date’ என்ற தேதியுடன் உங்கள் விசா விவரங்களை காண்பிக்கும்.

கூடுதல் காலம் தங்குவதற்கான அபராதம்:

அமீரகத்தில் சுற்றுலா, ரெசிடென்ஸ் மற்றும் விசிட் விசா காலாவதியான பிறகு, கூடுதலாக தங்கும் ஒவ்வொரு நாளுக்கும் 50 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும். எனவே, உங்கள் மொபைலில் நோட்டிபிகேஷன்களை ஆன் செய்வதன் மூலம் விசா, எமிரேட்ஸ் ஐடி அபராதம் பெறுவதையும் தவிர்க்கலாம்.

அபராதத்தை பின்வரும் வழிகளில் செலுத்தலாம்:

ஆன்லைன்: கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரங்களின் இணையதளங்கள் மூலம் நீங்கள் அதிக காலம் தங்கியிருக்கும் அபராதத்தை செலுத்தலாம்:

ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குள் நுழைந்ததும், உங்கள் விசாவின் விவரங்களை உள்ளிடவும். பின்னர், நீங்கள் செலுத்த வேண்டிய அபராதங்கள் திரையில் தோன்றும். இறுதியாக, உங்கள் கிரெடிட் அல்லது டெபிட் கார்டைப் பயன்படுத்தி அபராதத்தைச் செலுத்தலாம்.

டைப்பிங் சென்டர்:

நீங்கள் புதிய விசாவிற்கு விண்ணப்பிக்க திட்டமிட்டிருந்தாலோ அல்லது அதிக காலம் தங்கியிருந்த அபராதத்தைச் செலுத்தி நாட்டை விட்டு வெளியேற இருந்தாலோ, ICP இல் பதிவுசெய்யப்பட்ட டைப்பிங் சென்டரை நீங்கள் பார்வையிடலாம். மேலும், https://icp.gov.ae/en/typing-offices/ இந்த லிங்க்கை கிளிக் செய்து நாட்டில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட டைப்பிங் சென்டர்களின் முழுமையான பட்டியலை காணலாம்.

 அமர் சென்டர்:

துபாயின் GDRFA சார்பாக ரெசிடென்ஸி விண்ணப்பங்களை அமர் மையங்கள் செயலாக்குகின்றன. துபாயில் அமைந்துள்ள அமர் மையங்களின் பட்டியலை இந்த இணையதளத்தின் மூலம் காணலாம்:

ICP வாடிக்கையாளர் மகிழ்ச்சி மையம்:

நீங்கள் அமீரகத்தில் உள்ள ICP  வாடிக்கையாளர் மகிழ்ச்சி மையங்களுக்கு நேரடியாகச் சென்றும் உங்கள் அபராதத்தை செலுத்திக்கொள்ளலாம்.

 

Related Articles

Back to top button
error: Content is protected !!