அமீரக செய்திகள்

மீலாது நபி: வாகனங்களுக்கு இலவச பார்க்கிங்கை அறிவித்த துபாய்..!!

முஹம்மது நபி பிறந்தநாளான மீலாது நபியை முன்னிட்டு துபாயில் வாகனங்களுக்கு இலவச பார்க்கிங் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மல்டி லெவல் டெர்மினல் பார்க்கிங் தவிர மற்ற அனைத்து பொது பார்க்கிங் இடங்களிலும் இலவசமாக வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை பார்க்கிங் செய்து கொள்ளலாம் என தெரிவிப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்த நாளில் பொது மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்படும் என்று அமீரக அரசு அறிவித்திருந்தது. அதன்படி இந்த நாளானது நாளை (அக்டோபர் 8, சனிக்கிழமை) அன்று வருகிறது.

துபாயை போன்றே அமீரகத்தின் மற்ற எமிரேட்டுகளான அபுதாபி மற்றும் ஷார்ஜாவும் வாகனங்களுக்கு இலவச பார்க்கிங் அளித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!