அமீரக செய்திகள்

துபாய் எப்படி பாலைவனத்தை பசுமையான சோலையாக மாற்றுகிறது? வியக்க வைக்கும் துபாயின் உத்திகள்!!

துபாய் ஒரு பாலைவன நிலம் என்பது அனைவரும் அறிந்ததே. இருப்பினும், துபாயில் எங்கு பார்த்தாலும் பசுமையான தோட்டங்கள், மலர் பூங்காக்கள், நீர்முனைகள் என கண்ணுக்கு இனிமையான காட்சிகளைக் காணமுடிகிறது. துபாய் எப்படி பாலைவனம் முழுவதையும் பசுமைப் போர்வையால் மூடியுள்ளது? என்ற கேள்வியும் நம்மில் பலருக்கும் இருக்கும். துபாய் முனிசிபாலிட்டி பாலைவனத்தை சோலையாக்க மேற்கொள்ள பல உத்திகளை கையாண்டு வருகிறது. அது குறித்த சுவாரசியமான தகவல்களை பற்றி இங்கு பார்க்கலாம்.

90% நீர் மறுபயன்பாடு:

கிட்டத்தட்ட 50 வருடங்களுக்கும் மேலாக, துபாய் முனிசிபாலிட்டி ஒரு அற்புதமான நீர் மறுசீரமைப்பு முயற்சியில் ஈடுபட்டுள்ளது, இதன் விளைவாக 90 சதவீத நீர் மறுபயன்பாட்டு விகிதத்தை எட்டியுள்ளது. அதாவது, 1980 முதல் 2022 வரை 4.5 பில்லியன் கன மீட்டர் தண்ணீரை மறுசுழற்சி செய்துள்ளது.

கழிவு நீர் சுத்திகரிப்பு தொழில்நுட்பம்:

துபாய், கழிவு நீர் சுத்திகரிப்பு வசதிகளில் அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, உயர்மட்ட சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை உருவாக்குகிறது. மேலும், இந்த தண்ணீரை பாசனம், மத்திய குளிர்ச்சி மற்றும் செயற்கை ஏரிகளை உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களுக்கு பயன்படுத்துகிறது. உதாரணமாக, 2022 ஆம் ஆண்டில், துபாய் 134 மில்லியன் கன மீட்டர் மறுசுழற்சி செய்யப்பட்ட தண்ணீரை பசுமையாக வைத்திருக்க பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

கழிவுநீர் சுத்திகரிப்பு நன்மைகள்:

துபாய் இவ்வாறு தண்ணீரை சுத்திகரித்து தோராயமாக 10,400 ஹெக்டேர் நிலங்களுக்கு நீர்ப்பாசனம் செய்ய பயன்படுத்துகிறது. இவ்வாறு மறுபயன்பாடு செய்வதன் மூலம், சுமார் 2 பில்லியன் திர்ஹம்களை சேமிப்பதாகக் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, எமிரேட்டின் 2050 நெட் ஜீரோ கார்பன் உமிழ்வு உத்தியுடன் இது ஒத்துப்போவதகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகரித்து வரும் தேவை:

நகரின் விரைவான விரிவாக்கத்திற்கு ஏற்ப கழிவு நீர் சுத்திகரிப்பு மற்றும் மறுசுழற்சி செய்யப்பட்ட நீரின் தேவையும் அதிகரித்தது. எனவே, அந்தத் தேவையைப் பூர்த்தி செய்ய 1981 இல் நிறுவப்பட்ட வார்சன் வசதி, அதன் திறனை ஒரு நாளைக்கு 260,000 கன மீட்டராக விரிவுபடுத்தியது, மேலும் 2006 இல் தொடங்கப்பட்ட ஜெபல் அலி ஆலை, நகரின் தினசரி நீர் மறுசுழற்சி திறனை சுமார் 560,000 கன மீட்டராக அதிகரித்துள்ளது.

நீர் பயன்பாட்டு விகிதம்:

துபாயின் பெரும்பாலான பகுதிகளை உள்ளடக்கிய சுமார் 2,400 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த நெட்வொர்க், ஒவ்வொரு ஆண்டும் பசுமையான இடங்களுக்கு சுமார் 265 மில்லியன் கன மீட்டர் தண்ணீரைப் பயன்படுத்த வழங்குகிறது.

மறுசுழற்சி செய்யப்பட்ட நீரின் பயன்பாடுகள்:

துபாய் சென்ட்ரல் கூலிங், தீயணைப்பு மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் பம்பிங் நிலையங்களில், சுத்திகரிப்பு செயல்முறைகள் போன்ற பல்வேறு பயன்பாடுகளுக்கு மறுசுழற்சி செய்யப்பட்ட தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது.

தூய்மையான தொழில்நுட்பம்:

சோலார் மற்றும் பம்ப் செய்யப்பட்ட ஹைட்ரோ-எலக்ட்ரிக் மின்சாரத்தைப் பயன்படுத்துவது போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த வழியை துபாய் பயன்படுத்துகிறது. அதன் அடிப்படையில், புதுப்பிக்கத்தக்க திட்டங்களின் கீழ், முகமது பின் ரஷீத் அல் மக்தூம் சோலார் பார்க் மற்றும் சைஹ் அல்-தஹாலில் 77 கிமீ² பரப்பளவில் மின் உற்பத்தி பேனல்கள் உள்ளன.

சொட்டு நீர்ப்பாசனம்:

உலகின் மிக தண்ணீர் பற்றாக்குறை உள்ள முதல் 10 நாடுகளில் அமீரகமும் ஒன்றாகும். இந்தச் சவாலை எதிர்கொள்ள, நாடு சொட்டு நீர்ப் பாசன முறையைப் பயன்படுத்துகிறது, இது தரையில் அல்லது தாவரங்களின் வேர்களுக்கு அருகில் புதைக்கப்பட்ட துளையிடப்பட்ட குழாய்களைப் பயன்படுத்தி நேரடியாக தாவரங்களின் அடிப்பகுதிக்கு தண்ணீரை வழங்குகிறது.

பசுமை தீர்வுகள்:

சமீபத்தில், துபாய் முனிசிபாலிட்டி வார்சன் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களில் பயோகேஸை எரிபொருளாகப் பயன்படுத்தியது. இந்த பயோகேஸ் உருவாக்கும் ஆலையின் மின்சாரத் தேவைகளில் சுமார் 50 சதவீதத்தை பூர்த்தி செய்வதாகக் கூறப்படுகிறது.

 

Related Articles

Back to top button
error: Content is protected !!