அமீரக செய்திகள்

UAE: Apple, Google Chrome பயனர்களுக்கு சைபர் செக்யூரிட்டி கவுன்சில் வெளியிட்டுள்ள எச்சரிக்கை!! உடனடியாக தங்கள் சாதனங்களை அப்டேட் செய்யுமாறு அறிவுறுத்தல்…

ஐக்கிய அரபு அமீரகத்தின் சைபர் செக்யூரிட்டி அதிகாரிகள் நாட்டு மக்கள் அனைவரையும் தங்கள் மொபைல் மற்றும் கணினி போன்ற எலெக்ட்ரானிக் சாதனங்களை அப்டேட் செய்யுமாறு வலியுறுத்தியுள்ளனர். குறிப்பாக, ஆப்பிள் சாதனங்கள் மற்றும் கூகுள் குரோம் பயன்படுத்துபவர்களுக்கு இந்த பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதாவது, குடியிருப்பாளர்கள் சமீபத்திய பதிப்புகளை அப்டேட் செய்யத் தவறினால், அவர்கள் பயன்படுத்தும் சாதனங்களில் உள்ள இயக்க அமைப்புகளில் (operating system) ஹேக்கர்கள் ஊடுருவி எளிதாக தீங்கிழைக்கும் கோடினை (code) இயக்குவார்கள் என்று சைபர் செக்யூரிட்டி கவுன்சில் (CSC) விவரித்துள்ளது.

எனவே, கூகுள் குரோம் பிரவுசரில் உள்ள அதிக ஆபத்தான பாதிப்புகள் குறித்து குடியிருப்பாளர்கள் விழிப்புடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேபோல், ஆப்பிள் பயனர்களின் iOS அமைப்புகளில் பல பாதிப்புகள் இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற சாத்தியமான அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாப்பாக இருக்க, Chrome மற்றும் Apple பயனர்கள் இருவரும் தங்கள் சிஸ்டமை சமீபத்திய பதிப்புகளுக்கு உடனடியாக அப்டேட் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Google Chrome பயனர்கள்

கூகுள் நிறுவனம் இந்த அச்சுறுத்தும் ஹேக்கிங்கில் இருந்து Google Chrome பயனர்களுக்கு தீர்வு வழங்க தொடர்ச்சியான புதுப்புது அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. குறிப்பாக, CVE-2023-5472 என அடையாளம் காணப்பட்ட இந்த பிழைகளில் (Bugs) ஒன்று, ஹேக்கர் பயனர்களின் இயக்க அமைப்புகளில் தங்களின் code-ஐ இயக்க அனுமதிப்பதாகக் கூறப்படுகிறது.

இது போன்ற பாதிப்புகளை தவிர்க்க, பயனர்கள் பிரவுசரின் சமீபத்திய பதிப்புகளை வைத்திருப்பதை உறுதிசெய்ய வேண்டும்:

  • Microsoft க்கு: சமீபத்திய பதிப்பு 118.0.5993.117 அல்லது 118.0.5993.118
  • MacOS மற்றும் Linusக்கு: 118.0.5993.117

Apple பயனர்கள்:

ஆப்பிள் சாதனங்களின் iOS, iPadOS, tvOS, watchOS மற்றும் Safari போன்ற இயக்க அமைப்புகளிலும் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. இவை அங்கீகரிக்கப்படாத தீங்கிழைக்கும் ஹேக்கிங் செயல்பாட்டிற்கு வழிவகுக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

எனவே, உங்கள் கணினிகளைப் பாதுகாக்க, கீழே உள்ள அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ள சமீபத்திய பதிப்புகளை அப்டேட் செய்திருக்கிறீர்களா என்பதை சரிபார்த்துக் கொள்ளுங்கள்:

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!