அமீரக சட்டங்கள்

துபாயில் 24 மணிநேர பார்க்கிங் டிக்கெட்டை வழங்கும் பகுதிகளை அடையாளம் காணுவது எப்படி..?? எப்போது இலவசமாக பார்க்கிங் செய்யலாம்..??

துபாயில் உள்ள பெரும்பாலான பொது பார்க்கிங் மண்டலங்கள் அதிகபட்சம் நான்கு மணிநேரம் வரை பார்க்கிங் டிக்கெட்டுக்கு பணம் செலுத்த அனுமதிக்கின்றன. ஆனால் சில இடங்களில் 24 மணிநேர பார்க்கிங்கிற்கு பணம் செலுத்த அனுமதிக்கும் பார்க்கிங் இடங்களும் உள்ளன. இது நீண்ட நேரம் பார்க்கிங் செய்ய விரும்பும் வாகன ஓட்டிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் மற்றும் அவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு ஒருமுறை டிக்கெட்டை புதுப்பிப்பதைப் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.

இந்த பார்க்கிங் மண்டலங்களை எப்படி அடையாளம் காணுவது என்று தெரியவில்லையா? சைன்போர்டுகளில் கட்டண பார்க்கிங் மண்டலத்தின் குறியீட்டைக் குறிக்கும் எழுத்துகளில் இருந்து இந்த பார்க்கிங் இடங்களை நீங்கள் எளிதாக கண்டுபிடிக்கலாம்.

பார்க்கிங் மண்டல எண்ணுடன் வரும் எழுத்துகளுக்கு என்ன அர்த்தம்?

பொதுவாக, துபாயில் உள்ள பொது பார்க்கிங் இடங்கள், பார்க்கிங் மண்டல எண் மற்றும் குறியீட்டுடன் நீலம் மற்றும் ஆரஞ்சு நிற அடையாளத்தால் அடையாளம் காணப்படுகின்றன. எடுத்துக்காட்டு: 232C. இதில் 232 என்பது மண்டல எண் மற்றும்  ‘C’ என்ற எழுத்து குறியீடு. இந்த குறியீடு பின்வரும் சில விஷயங்களைக் குறிக்கிறது:

 • மணிநேர பார்க்கிங் விகிதம் என்ன?
 • ஒரே டிக்கெட்டில் உங்கள் காரை அங்கு நிறுத்தக்கூடிய குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச நேரம் என்ன?
 • பார்க்கிங் மண்டலம் எப்போது இலவசம்?
 • சீசனல் பார்க்கிங் கார்டை உங்களால் பயன்படுத்த முடியுமா அல்லது பயன்படுத்த முடியாதா?

இப்போது துபாயில் 24×7 பார்க்கிங் டிக்கெட்டுகளை வழங்கும் பார்க்கிங் மண்டலங்கள் பற்றி பின்வருமாறு பார்க்கலாம்:

குறியீடு B இந்த குறியீடு வணிகப் பகுதிகளில் உள்ள பார்க்கிங் மண்டலங்களில் இருக்கும்.  இங்கு ஒரு டிக்கெட்டுக்கு அதிகபட்சமாக 24 மணிநேரம் பார்க்கிங் அனுமதிக்கப்படும்.

பார்க்கிங் காலம் மற்றும் கட்டணம்:

 • ஒரு மணி நேரத்திற்கு 3 திர்ஹம்
 • இரண்டு மணிநேரத்திற்கு 6 திர்ஹம்
 • மூன்று மணிநேரத்திற்கு 8 திர்ஹம்
 • நான்கு மணிநேரத்திற்கு 12 திர்ஹம்
 • ஐந்து மணிநேரத்திற்கு 15 திர்ஹம்
 • 24 மணிநேரத்திற்கு 20 திர்ஹம்

குறியீடு D: குடியிருப்புகள் அல்லாத பகுதிகளில் உள்ள பார்க்கிங் பகுதிகள் D குறியீட்டால் அடையாளம் காணப்படுகின்றன.

பார்க்கிங் காலம் மற்றும் கட்டணம்:

 • ஒரு மணிநேரத்திற்கு 2 திர்ஹம்
 • இரண்டு மணிநேரத்திற்கு 4 திர்ஹம்
 • மூன்று மணிநேரத்திற்கு 5 திர்ஹம்
 • நான்கு மணிநேரத்திற்கு 7 திர்ஹம்
 • 24 மணிநேரத்திற்கு 10 திர்ஹம்

குறியீடு K: இந்த குறியீட்டை உடைய பார்க்கிங் மண்டலங்கள் ஜுமேரா லேக் டவர்ஸ் (JLT) பகுதியில் அமைந்துள்ளன.

 • 30 நிமிடங்களுக்கு 2 திர்ஹம்
 • ஒரு மணிநேரத்திற்கு 4 திர்ஹம்
 • இரண்டு மணிநேரத்திற்கு 8 திர்ஹம்
 • மூன்று மணிநேரத்திற்கு 12 திர்ஹம்
 • நான்கு மணிநேரத்திற்கு 16 திர்ஹம்
 • ஐந்து மணிநேரத்திற்கு 20 திர்ஹம்
 • ஆறு மணிநேரத்திற்கு 24 திர்ஹம்
 • ஏழு மணிநேரத்திற்கு 28 திர்ஹம்
 • எட்டு முதல் 24 மணிநேரத்திற்கு 32 திர்ஹம்

24/7 பல மாடி கார் நிறுத்துமிடங்கள்: துபாயில் RTA ஆல் இயக்கப்படும் பல மாடி கார் பார்க்கிங் இடங்களிலும் 24 மணிநேர டிக்கெட்டை நீங்கள் பெறலாம். அவை பின்வரும் இடங்களில் காணப்படுகின்றன:

 1. அல் குபைபா கார் பார்க்
 2. அல் சப்கா கார் பார்க்
 3. நைஃப் கார் பார்க்
 4. அல் கிஃபாஃப் கார் பார்க்
 5. ஓத் மேத்தா கார் பார்க்
 6. அல் சத்வா
 7. அல் ரிக்கா கார் பார்க்
 8. பனி யாஸ் கார்க் பார்க்

பல மாடி பார்க்கிங் கட்டணம்:

 • ஒரு மணி நேரத்திற்கு 5 திர்ஹம் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட வரி (VAT).
 • ஒரு நாளுக்கு 42 திர்ஹம் மற்றும் VAT கட்டணம்.

ஒருவேளை நீங்கள் பார்க்கிங் டிக்கெட்டை இழந்தால், 150 திர்ஹம்ஸ் அபராதம் மற்றும் வாகனத்தை நிறுத்திய காலத்திற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும். மல்டி ஸ்டோரீ கார் பார்க்கிங் பொது பார்க்கிங் பகுதிகளிலிருந்து வேறுபட்டது, அதாவது இந்த இடங்களில் எல்லா நேரங்களிலும  நீங்கள் பார்க்கிங் செய்ய பணம் செலுத்த வேண்டும்.

ஆனால், பொதுப் பார்க்கிங் மண்டலங்கள் ஒவ்வொரு நாளும் காலை 8 மணி முதல் மாலை 6 மணி அல்லது இரவு 10 மணி வரை மட்டுமே பார்க்கிங் மண்டலத்தைப் பொறுத்து கட்டணம் வசூலிக்கின்றன. இதற்கிடையில், ​​நாலெட்ஜ் வில்லேஜ், துபாய் மீடியா சிட்டி மற்றும் துபாய் இன்டர்நெட் சிட்டியில் அமைந்துள்ள பார்க்கிங் மண்டலங்கள் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை பார்க்கிங் கட்டணம் வசூலிக்கின்றன.

மேலும், இந்த பொது பார்க்கிங் மண்டலங்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் பயன்படுத்த இலவசம், குறிப்பாக சனிக்கிழமை மாலை 6 மணி அல்லது இரவு 10 மணி (மண்டலத்தைப் பொறுத்து) முதல் திங்கள் காலை 8 மணி வரை இலவசமாகும்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!