வளைகுடா செய்திகள்

ஓமானில் இன்று காலை 4.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்.. 5 கிமீ கடல் ஆழத்தில் ஏற்பட்டதாக EMC அறிக்கை..!!

ஓமான் நாட்டில் இன்று அக்டோபர் 21ம் தேதி சனிக்கிழமை ஓமன் கடலில் 4.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஓமான் நாட்டின் பூகம்ப கண்காணிப்பு மையம் (EMC) தெரிவித்துள்ளது.

இன்று காலையில் திடீரென ஏற்பட்ட இந்த பூகம்பத்தின் அதிர்வை தெற்கு அல் ஷர்கியா மாகாணத்தில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் உணர்ந்ததாகவும் ஓமான் நாட்டின் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

இது குறித்து சுல்தான் கபூஸ் பல்கலைக்கழகத்தில் உள்ள நிலநடுக்க கண்காணிப்பு மையம் (EMC) தெரிவிக்கையில் ஓமன் கடலில் உள்ளூர் நேரப்படி இன்று காலை 10.00 AM மணி அளவில், 5 KM ஆழத்தில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக கூறியுள்ளது.

மேலும் இந்த நிலநடுக்கம் தெற்கு அல் ஷர்கியாவில் உள்ள சூர் விலாயாத் பகுதியில் இருந்து வடகிழக்கே 57 கிமீ தொலைவில் பதிவாகியுள்ளதாகவும் EMC வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!