அமீரக செய்திகள்

அபுதாபியில் பிரபலமான உணவு கேட்டரிங் நிறுவனத்தை மூட உத்தரவு.. கெட்டுப்போன உணவுகள் கண்டுபிடிக்கப்பட்டதால் நடவடிக்கை..!!

அபுதாபியில் இயங்கிவந்த பிரபலமான உணவு கேட்டரிங் நிறுவனம் ஒன்று பொது சுகாதாரத்திற்கு ஆபத்து ஏற்படுத்தியாக கூறி, அந்த உணவு கேட்டரிங் வசதியை மூடுமாறு அபுதாபியின் வேளாண்மை மற்றும் உணவு பாதுகாப்பு ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

அபுதாபிக்கு உட்பட்ட அல் தஃப்ரா பிராந்தியத்தின் கயாதியில் (Ghayathi) இயங்கிவரும் ‘ராயல் கேட்டரிங் சர்வீசஸ்’ நிறுவனத்தின் உணவு சமைக்கும் இடத்தில் சுகாதாரம் தொடர்பான மீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆணையம் நிர்வாக மூடல் முடிவை வெளியிட்டுள்ளது.

அபுதாபி எமிரேட்டில் வணிக உரிமத்தை வைத்திருக்கும் இந்த உணவக வசதி, உணவு தொடர்பான 2008 ஆம் ஆண்டின் சட்ட எண் (2) ஐ மீறியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அதாவது உணவில் E. Coli நச்சுத்தன்மை இறுப்பது உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக உணவு பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

அதேபோல், சிலர் பாக்டீரியாவால் மாசுபட்ட இறைச்சியுடன் கூடிய வெள்ளை பீன்ஸ் சாலட்டை (Salad) சாப்பிட்டதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு சமூக உறுப்பினர்களின் உடல்நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் கெட்டுப்போன உணவுகளை விநியோகத்ததால் கேட்டரிங் வசதிக்கு பணி நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ராயல் கேட்டரிங் சர்வீசஸ் நிறுவனமானது அமீரகத்தில் இயங்கிவரும் பிரபலமான உணவு கேட்டரிங் நிறுவனங்களில் ஒன்றாகும். இது ADNOC, BNPP (Barakah Nuclear Power Plant) உள்ளிட்ட அபுதாபியின் முக்கிய நிறுவனங்களுக்கு உணவு கேட்டரிங் சர்வீஸை வழங்கி வந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

 

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!