அமீரக செய்திகள்

ஒரே இடத்தில் 2,000க்கும் மேற்பட்ட பட்டாம்பூச்சிகள்..!! அபுதாபியில் புதிதாக திறக்கப்பட உள்ள பட்டர்ஃபிளை கார்டன்!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில், குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாவாசிகளை கவரும் பொருட்டு புதிதாக பட்டர்ஃபிளை கார்டன்ஸ் (Butterfly Gardens) திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்தியில் இந்த கார்டன் சுமார் 40 க்கும் மேற்பட்ட இனங்களைச் சேர்ந்த 2,000 க்கும் மேற்பட்ட பட்டாம்பூச்சிகளுக்கு இருப்பிடமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

அபுதாபியின் அல் கானாவில் (Al Qana) உள்ள தேசிய அக்குவாரியத்துக்கு (National Aquarium) அருகில் அமைந்திருக்கும் இந்த பட்டர்ஃப்ளை கார்டன் அடுத்த ஆண்டு திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன் இது திறக்கப்படும் பட்சத்தில் தினமும் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை இந்த கார்டன் இயங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கு பட்டாம்பூச்சிகள் மற்றும் பூச்சி இனங்களை அவற்றின் இயற்கையான வாழ்விடங்களில் பார்ப்பது மட்டுமல்லாமல், கூட்டுப்புழுவின் (pupa) நேரடி வளர்ச்சியையும் கண்காணிக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த புதிய உட்புறத் திட்டமானது ஆசியா, அமெரிக்கா மற்றும் ஈடன் கஃபே என மூன்று தனித்துவமான அழகுபடுத்தப்பட்ட மண்டலங்களைக் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இவை மட்டுமல்லாமல், தனித்துவமான நட்சத்திர ஒளி இரவு அமைப்பு (starlight night setting) பார்வையாளர்களைக் குதூகலப்படுத்தும் அம்சமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

செய்திகளை ஆடியோ/வீடியோ வடிவில் தெரிந்துகொள்ள எங்களின் Youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!

Subscribe

மேலும், ஆசியா, மத்திய மற்றும் தென் அமெரிக்காவின் தனித்துவமான சுற்றுச்சூழல் அமைப்புகளால் ஈர்க்கப்பட்ட பசுமையான வெப்பமண்டல தோட்டங்கள் இதில் இடம்பெறும் என்றும் ஈடன் கஃபேயில் அருவி, குளம் மற்றும் வெள்ளை மயில்கள் போன்றவற்றை பார்த்து ரசிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கஃபே அதன் பார்வையாளர்கள் பட்டாம்பூச்சிகளுடன் தேநீர் அருந்துவதற்கான வாய்ப்பை வழங்கும் என்று கூறப்பட்டுள்ளது.

அத்துடன் வண்ணத்துப்பூச்சிகள், பூச்சி இனங்கள் மற்றும் தேனீக்கள் போன்ற பிற அத்தியாவசிய மகரந்தச் சேர்க்கைகளைப் பற்றி அறிந்து கொள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் ஈடுபடுத்தப்படும் வகையில் இந்த இடம் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!